கேரளாவில் மூன்று பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு! மாநிலப் பேரிடராக அறிவிப்பு!

04 February 2020 அரசியல்
coronavirus.jpg

கேரள மாநிலத்தில், கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு இருப்பவர்களின் எண்ணிக்க்கையானது, தற்பொழுது மூன்றாக உயர்ந்துள்ளது. இதனை, அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் சைலஜா தெரிவித்துள்ளார்.

சீனாவில் இருந்து, கேரளாவிற்கு வந்தவர்களை மருத்துவப் பரிசோதனை செய்து பார்க்கும் பொழுது, ஊஹான் பகுதியில் இருந்து வந்திருந்த பெண்மணிக்கு, இந்த வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இதனால், அவருக்கு தீவிர சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகின்றன.

அவர் காசர்கோடு மாவட்டத்தின் கான்கன்காடு பகுதியினைச் சேர்ந்தவர் எனவும், அவர் தற்பொழுது தனிமைப்படுத்தப்பட்டு உள்ளார் எனவும் அமைச்சர் தெரிவித்தார். அந்தப் பெண்ணிற்கு, அடுத்த 28 நாட்கள் தொடர் சிகிச்சை அளிக்கப்படும் எனவும், அதுவரை அப்பெண்மணி வெளியில் நடமாட அனுமதிக்கப்பட மாட்டார் எனவும் கூறினார். இருப்பினும், இந்த நோயானது 14 நாட்களில் குணமாகிவிடும் என எதிர்ப்பார்ப்பதாகவும் நம்பிக்கைத் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் பாதிப்பிற்காக, 10 சிறப்பு தனி வார்டுகளை, கேரள மருத்துவமனையில் அரசாங்கம் ஒதுக்கியுள்ளது. மேலும், இந்த வைரஸ் அறிகுறி இருப்பவர்களாக 28 பேரினை தொடர்ந்து, மருத்துவர்கள் கண்காணித்து வருகின்றனர். இந்த பாதிப்பினைத் தொடர்ந்து, கேரள அரசாங்கம் இந்த கொரோனா வைரஸ் பாதிப்பினை, மாநில பேரிடராக அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

HOT NEWS