போதை வெறி! மெத்தனால் குடித்தவர்கள் இருவர் மரணம்! ஒருவருக்கு பார்வை பறிபோனது!

15 April 2020 அரசியல்
methanol.jpg

இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவானது நீட்டிக்கப்பட்டு உள்ளது. இதனால், பொதுமக்கள் வெளியில் அநாவசியமாக வெளியில் வரத் தடை விதிக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில், குடிமகன்கள் சாராயம் கிடைக்காமல் திண்டாடி வருகின்றனர்.

கடலூர் மாவட்டத்தில் உள்ள, ஆலப்பாக்கத்தில் அமைந்துள்ள ரசாயமன நிறுவனத்தில் வேலைப் பார்த்து வந்தவர் குமரேசன். அங்கு இருந்து மெத்தனாலை வீட்டிற்குக் கொண்டு வந்துள்ளார். அதனை, தன்னுடைய நண்பர்களான சந்திரகாசி, எழில்வாணன், மாயக் கிருஷ்ணன், சுந்தர்ராஜ் உள்ளிட்டோருடன் பகிர்ந்து அருந்தியுள்ளார்.

இதில், அனைவரின் உடலும் மோசமானதால் அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில், குமரேசனின் உடல்நிலை ஓரளவு தப்பித்து விட்டது. மற்றவர்கள் மிக ஆபத்தான நிலையில் உயிருக்குப் போராடி வந்தனர். இதில், மாயக் கிருஷ்ணன், சுந்தர் ராஜ் உள்ளிட்டோர் மரணமடைந்தனர். எழில்வாணனின் கண்பார்வைப் பறிபோனது. குமரேசனின் வாக்குமூலத்தின் அடிப்படையில், இவர்கள் மெத்தனால் பயன்படுத்தியது கண்டுபிடிக்கப்பட்டது.

இவர்கள் மெத்தனாலை எடுத்து வந்த அந்த கடைக்கு, போலீசார் சீல் வைத்தனர். தமிழகத்தில் ஷேவிங் லோசன், வார்னிஷ் உள்ளிட்டப் பொருட்களை போதைக்காக பயன்படுத்தி உயிரிழந்தவர்களின் மத்தியில், மெத்தனாலைக் குடித்து மரணமடைந்துள்ள சம்பவம் பரபரப்பினை ஏற்படுத்தி உள்ளது.

HOT NEWS