கடந்த 2017ம் ஆண்டு, நடிகர் விஷால், நடிகர் பிரச்சனா நடிப்பில் வெளியான திரைப்படம் துப்பறிவாளன். இந்தப் படத்தினை இயக்குநர் மிஷ்கின் இயக்கியிருந்தார். இந்தப் படம் வசூல் ரீதியாகவும், பார்வையாளர்கள் ரீதியாகவும் நல்ல வரவேற்பினைப் பெற்று அசத்தியது.
இந்தப் படத்திற்குப் பிறகு, நடிகர் விஷால் மற்றும் பிரசன்னாவின் மார்க்கெட்டும் கூடியது. இதனையடுத்து, துப்பறிவாளன் படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் உருவாக்கப்படும் என விஷால் தரப்பில் கூறப்பட்டு இருந்தது. இதனிடையே, ஆக்ஷன் திரைப்படத்தில் நடிகர் விஷால் மூழ்கிவிட்டார்.
ஆக்ஷன் படம் வெளியாகி, பெரிய அளவில் நஷ்டம் ஏற்பட்டுள்ளதைத் தொடர்ந்து, தற்பொழுது துப்பறிவாளன்-2 படத்தின் சூட்டிங்கானது, லண்டனில் விறுவிறுப்பாக சென்று கொண்டுள்ளது. இந்தப் படத்தினையும், விஷால் தயாரித்து நடிக்க, மிஷ்கின் இயக்குகின்றார். இப்படத்தில், பிரச்சன்னாவும் முக்கியக் கதாப்பாத்திரத்தில் நடித்து வருகின்றார். படத்தின் சூட்டிங் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கின்ற நிலையில், படத்தின் புகைப்படம் தற்பொழுது வெளியாகி உள்ளது.
ஹாலிவுட்ல் வெளியாகி, சக்கைப் போடு போட ஷெர்லாக் ஹோல்ம்ஸ் படத்தினைத் தழுவியே இந்த துப்பறிவாளனும், துப்பறிவாளன்-2வும் உருவாக்கப்பட்டு வருகின்றன.