நடிகர் விஷால் நடிப்பில் துப்பறிவாளன் 2 படத்தின் அதிகாரப் பூர்வ அறிவிப்பு வெளியானது. இதனால், விஷாலின் ரசிகர்கள் குஷியாக உள்ளனர்.
நடிகர் விஷால், பிரச்சனா, ஜெய், ஆண்ட்ரியா நடிப்பில், இயக்குநர் மிஷ்கின் இயக்கத்தில் உருவான திரைப்படம் துப்பறிவாளன். உலகளவில் பிரசித்திப் பெற்ற செர்லாக் ஹோல்ம்ஸ் திரைப்படத்தினைத் தழுவி, உருவாக்கப்பட்டு இருந்தாலும், படம் மாபெரும் வெற்றியைப் பெற்றது. இதனைத் தொடர்ந்து, இப்படத்தின் இரண்டாம் பாகத்தினை இயக்குநர் திரு. மிஷ்கின் உருவாக்கி வந்தார்.
இந்நிலையில், இன்று விஷால் சினிமாவிற்கு வந்து 15 வருடங்கள் ஆனதைத் தொடர்ந்து, அவருடைய அடுத்தப் படத்தின் அறிவிப்பு வெளியானது. துப்பறிவாளன் 2 படத்திற்காக, இசைஞானி இளையராஜா இசையமைக்க உள்ளார்.
இதனைத் தன்னுடைய அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் விஷால். இந்தப் புகைப்படத்தில், விஷாலுடன், இயக்குநர் மிஷ்கின் மற்றும் இளையராஜா ஆகியோர் இருக்கின்றனர். இந்த அறிவிப்பினைத் தொடர்ந்து, விஷாலின் ரசிகர்கள் இந்த அறிவிப்பினை, கொண்டாடி வருகின்றனர்.