கருப்பர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் டிரம்பின் மகள்! 2வது மனைவியும் ஆதரவு!

04 June 2020 அரசியல்
tiffanytrump.jpg

தற்பொழுது அமெரிக்கா முழுவதும், கருப்பர்கள் போராட்டம் தீவிரமடைந்து உள்ளது. ஜார்ஜ் ப்ளாய்ட் என்ற கருப்பினத்தினைச் சேர்ந்தவர் போலீசார் கொல்லப்பட்டார் என்றப் புகார் காரணமாக, கருப்பர்கள் கூட்டம் கூட்டமாகப் போராட ஆரம்பித்தனர்.

இதனால், அமெரிக்காவில் பெரும் பதற்றம் ஏற்பட்டு உள்ளது. தொடர்ந்து கருப்பர்கள் கடுமையாக தாக்கப்படுவதாகவும், எங்களுக்கு பாதுகாப்பு இல்லை எனவும் என போராடி வருகின்றனர். பல அரசியல்வாதிகளும் இதற்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் ஆதரவளித்து வருகின்றனர். இதனை போலீசாரால் பெருமளவில் கட்டுப்படுத்த இயலவில்லை. நேற்று, மண்டியிட்டு அவர்களை தடுக்க முயன்றனர். இருப்பினும், போராட்டக்காரர்கள் கலைந்து செல்வதாக இல்லை.

இந்நிலையில், அமைதியாக போராட்டம் முடியாவிட்டால், அமெரிக்க இராணுவத்தினைப் பயன்படுத்தி, போராட்டத்தினை ஒடுக்குவேன் என, அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கூறியுள்ளார். இது, எரிகின்ற நெருப்பில் எண்ணெய் ஊற்றியது போல் ஆகிவிட்டது. இப்படிப்பட்ட சூழ்நிலையில், டொனால்ட் ட்ரம்பின் இரண்டாவது மனைவியான மார்லா மார்பில்ஸ்ம், அவருடைய மகளுமான டிப்பானி டிரம்பும் கருப்பர்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளனர்.

நாம் ஒற்றுமையாக இருந்தால், பல விஷயங்களை சாதிக்க இயலும். தனித்து நின்றால் மிகவும் சிறிய அளவே சாதிக்க இயலும் என்றுக் கூறியுள்ளார். இதனையே, அவருடைய தாயும் தன்னுடைய சமூக வலைதளப் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இதற்கு அமெரிக்கா உட்படப் பல நாடுகளைச் சேர்ந்தவர்களும் இதற்கு ஆதரவும், பாராட்டும் தெரிவித்துள்ளனர்.

HOT NEWS