ஒரு நாளைக்கு 15,000 வீடியோக்களை நீக்குகிறது டிக்டாக்!

24 July 2019 தொழில்நுட்பம்
tiktok.jpg

ஒரு நாளைக்குச் சராசரியாக 15,000 வீடியோக்களை நீக்கி வருவதாக டிக்டாக் நிறுவனம் கூறியுள்ளது. அந்நிறுவனத்தின் ஊழியர் ஒருவர் டைம்ஸ் ஆஃப் இந்தியா நிறுவனத்திற்கு அளித்துத் தகவலின் படி, சென்ற ஆண்டு 60,00,000 வீடியோக்களை அந்நிறுவனம் அழித்துள்ளது.

டிக்டாக் விதிகள் மற்றும் சட்டத்தின்படி, சுமார் 6மில்லியன் வீடியோக்களை நீக்கியுள்ளதாக கூறியுள்ளார், அதாவது ஒரு நாளைக்கு 15,000 வீடியோக்கள். டிக்டாக் செயலியின் உரிமையாளரான பைட்டான்ஸ் தற்பொழுது, இந்திய அரசின் கண்டனத்திற்கு ஆளாகி வருகிறது.

தொடரும் சமூக குற்றங்கள் மற்றும் பிரச்சனைகளுக்கு, சமீப காலமாக டிக்டாக் செயலி உள்ளது என்பதை நாம் கண் கூடாகப் பார்க்கின்றோம். இந்நிலையில், இதன் மீது தடை விதிக்க, மத்திய அரசு யோசித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

HOT NEWS