தொடர்ந்து பல புகார்கள் டிக்டாக் நிறுவனத்தின் மீது தெரிவிக்கப்பட்டதால், அதன் சிஇஓ தன்னுடையப் பதவியினை ராஜினாமா செய்துள்ளார்.
இந்தியாவில் டிக்டாக் தடை செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அமெரிக்காவும் வருகின்ற செப்டம்பர் முதல் அதனை தடை செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது. அதற்குள், டிக்டாக் ஆப்பினை, அமெரிக்காவின் மைக்ரோசாப்ட் உள்ளிட்ட நிறுவனங்கள், வாங்க நினைத்தால் வாங்கிக் கொள்ளலாம் என்றுக் கூறியுள்ளது.
இருப்பினும், டிக்டாக் செயலியின் ஓனராக இருக்கும் பைட்டான்ஸ் நிறுவனம், டிக்டாக் ஆப்பினை விற்கும் முடிவினை ஏற்கவே இல்லை. இதனால், டிக்டாக் ஆப்பிற்கு நாளுக்கு நாள் சிக்கல்கள் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே இருந்தது. இந்த சூழ்நிலையில், டிக்டாக் நிறுவனத்தின் சிஇஓவான கெவின் மேயர், தன்னுடைய பதவியினை ராஜினாமா செய்துள்ளார்.
இது குறித்து, தன்னுடைய ஊழியர்களுக்கு அவர் அனுப்பியுள்ள ஈமெயிலில், கனத்த இதயத்துடன் இந்த நிறுவனத்தினை விட்டு வெளியேறுவதாக அறிவித்துள்ளார். அவருக்குப் பதிலாக, தற்பொழுது அந்த நிறுவனத்தின் பொது மேலாளராக இருக்கும் வனேசா பப்பாஸ் புதிய சிஇஓவாக செயல்படுவார் என, டிக்டாக் நிறுவனம் அறிவித்துள்ளது.