இந்தியா அளவில் பெரிதாகப் பயன்படுத்தப்பட்டு வரும் ஆன்ட்ராய்டு ஆப் என்றால், அது டிக்டாக் ஆப் தான். முழுக்க முழுக்க பொழுதுபோக்கிற்காக உருவாக்கப்பட்ட இந்த ஆப்பில், நாம் பாடலாம், நடிக்கலாம், ஆடலாம். இதனால், இது மிகக்குறுகியக் காலத்தில் இந்தியாவில் பிரபலமடைந்தது.
தமிழ்நாடு உட்பட அனைத்து மாநில மக்களும், இதற்கு அடிமையாக ஆரம்பித்தனர். இந்த ஆப்பினால், பலருடைய குடும்பங்களில் பிரச்சனைகள் ஏற்பட்டன. குறிப்பாக, அதிகளவில் விபச்சாரம் நடப்பதாகக் கூறப்பட்டன. இதனை கடந்த ஆண்டு, உயர்நீதிமன்றம் தடை செய்தது. பின்னர், உச்சநீதிமன்றத்தின் மூலம், மீண்டும் டிக்டாக் ஆப்பானது, புழக்கத்திற்கு வந்தது.
இதில், சுமார், 60 லட்சம் ஆபாச வீடியோக்கள் உள்ளன எனவும், அவைகளை நாங்கள் நீக்கிவிட்டோம் எனவும், டிக்டாக் நிறுவனம் கூறியது. இதனைத் தொடர்ந்து, பலரும் தங்களுடைய ஆபாச வீடியோக்களைத் தொடர்ந்து பதிவேற்றம் செய்து கொண்டே இருந்தனர். இந்நிலையில், தற்பொழுது சீனாவில் இருந்து உலகம் முழுக்க கொரோனா வைரஸானது பரவ ஆரம்பித்தது.
இதனால், சீனாவின் மீதும், சீனப் பொருட்களின் மீது உலக மக்கள்க கடும் விரக்தியில் உள்ளனர். இதனை எவ்வாறு வெளிப்படுத்துவது என அனைவரும் யோசித்து நூதனமாக தங்களுடைய வெறுப்பினை வெளிப்படுத்தி வருகின்றனர். இதில், அனைவரும் கண்களுக்கும் சிக்கியது டிக்டாக் தான். டிக்டாக் நிறுவனம், சீனாவினைச் சேர்ந்தது.
இவ்வளவுப் பிரச்சனைகளுக்கு இடையில், இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையில், லடாக் பகுதியில் சண்டை ஏற்பட்டது. இரு நாட்டு வீரர்களும், கைகலப்பில் ஈடுபட்டனர். அவ்வளவு தான், ஒட்டுமொத்த இந்திய டிக்டாக் பயன்படுத்துவோரும், டிக்டாக்கினை வைத்து செய்துவிட்டனர். கூகுள் ப்ளே ஸ்டோருக்குச் சென்ற அவர்கள், டிக்டாக்கின் ரேட்டிங்கினைத் தாறுமாறாகக் குறைத்து விட்டனர்.
4.5 என்ற ரேட்டிங்கில் இருந்த டிக்டாக் ஆப்பானது, தற்பொழுது 1.2 என்று குறைத்து விட்டனர். தொடர்ந்து டிக்டாக் ஆப்பிற்கு எதிராக, தங்களுடைய ரேட்டிங்கினையும், கமெண்ட்டுகளையும் பதிவு செய்து வருவதால், டிக்டாக்கின் மதிப்பானது மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டு உள்ளது.
தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில், பதிவிட்டுள்ள டிக்டாக் நிறுவனம், தங்களுடைய பாலிசிக்கு எதிராக, ஆபாச வீடியோக்களை பதிவிட்டவர்களின் கணக்குகளை நீக்கியுள்ளதாகவும், அவர்களின் வீடியோக்களும் நீக்கப்பட்டு உள்ளன எனவும் கூறியுள்ளது. தங்களுடையக் கணக்குகளை இழந்தவர்கள், ப்ளே ஸ்டோர் சென்று, அதன் ரேட்டிங்கினைக் குறைத்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.