டிக்டாக் வீடியோவில் வீதிக்கு வந்த பெண்! இன்னும் எத்தனைப் பேரோ?

26 November 2019 அரசியல்
tiktok.jpg

டிக்டாக் வீடியோக்களில் மதுரையைச் சேர்ந்த பெண், தற்பொழுது வீதிக்கு வந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுரையை சேர்ந்த பெண் தோழிகள் இருவர், டிக்டாக் தொடர்ந்து தங்களுடைய நடிப்புத் திறமையை வெளிப்படுத்தி வந்தனர். இவர்களுக்கு திருமணமாகி குடும்பம் உள்ளது. இவர்கள், டிக்டாக் வீடியோ வெளியிடுவதை குடும்பத்தினர் விரும்பவில்லை. இருப்பினும், பிரச்சனை வேண்டாம் என அவர்கள் பொறுமையாகக் காத்திருந்தனர்.

இந்நிலையில், தேனியினைச் சேர்ந்த சுகந்தி என்ற பெண்ணின் நட்பானது, டிக்டாக்கில் கிடைத்துள்ளது. இதில், சுகந்திக்கும், அந்த இரண்டுப் பெண் தோழிக்கும் இடையில் நடைபெற்றப் பிரச்சனையின் காரணமாக, இரண்டுப் பெண்களையும் விலைமாதர்களாக சித்தரித்து வீடியோ வெளியிட்டார் சுகந்தி.

இதற்கு, அவருடைய நண்பரும் உதவி செய்துள்ளதாக தெரிகின்றது. தொடர்ந்து, இத்தகைய வீடியோக்கள் டிக்டாக்கில் வைரலானதால், விஷயம் விபரீதமாவதை அறிந்த அந்த இரண்டுப் பெண்களும் போலீசில் புகார் அளித்தனர். இந்த விஷயத்தினை அடுத்து, சுகந்தியினைக் கைது செய்ய விரைந்தனர். ஆனால், ஏற்கனவே முன்ஜாமீன் வாங்கியுள்ளதால், அவரை கைது செய்யவில்லை.

அவரை எச்சரித்தப் போலீசார், அவர் டிக்டாக்கில் ஒரு வருடம் வீடியோ வெளியிடத் தடை விதித்துள்ளனர். மேலும், அவருடையப் போனையும் வாங்கி வைத்துள்ளனர். ஆனால், அந்தப் பிரச்சனையானது, அந்த இரண்டுப் பெண்களில், ஒருவரின் வாழ்க்கையில் ’கஜா’ புயலை விட பயங்கரமாக வீசியுள்ளது. இந்த வீடியோக்கள் அதிகமாக வெளிவந்ததன் காரணமாக, அந்தப் பெண்களில் ஒருவரை வீட்டை விட்டு விரட்டிவிட்டனர். தற்பொழுது, ஒரு காப்பகத்தில் தஞ்சம் புகுந்துள்ளார் அந்தப் பெண்.

டிக்டாக் மூலம், பலர் தங்களுடையத் திறமையைக் காட்டுவதாகக் கூறி தங்களுடையப் பொன்னான நேரத்தையும், அர்த்தமுள்ள வாழ்க்கையையும் இழந்து வருவது தொடர் கதையாக உள்ளது.

HOT NEWS