டிக்டாக்கில் வைரலானவர் தங்கையுடன் தற்கொலை முயற்சி! வைரல் வீடியோ!

09 March 2020 சினிமா
tiktokgirlsuicide.jpg

டிக்டாக் மூலம், பலர் தங்களுடைய வாழ்க்கையினை இழந்து வருகின்றனர் என்பது தான், நிதர்சனமான உண்மை. ஆண்கள் முதல் பெண்கள் வரை, யாரும் இந்த டிக்டாக் அரக்கனிடமிருந்து தப்பிக்க முடியவில்லை.

இதில் பலர் விபச்சாரத் தொழிலினை, ஜோராக நடத்துகின்றனர். சிலர், தங்களுடையத் திறமையினைக் காட்டி அதிர்ஷ்டத்தின் காரணமாக, பெரியாளாகின்றனர். ஆனால், மற்றவர்களோ பொழுதுபோக்கிற்காக பயன்படுத்துகின்றோம் என நினைத்து, அதற்கு அடிமையாகி, தங்கள் வாழ்க்கையினைத் தொலைக்கின்றனர்.

கடந்த வாரம், வீடியோ ஒன்று வைரலானது. அதில் பேசிய பெண், தான் காதலித்து திருமணம் செய்து கொண்டதாகவும், பின்னர் கணவர் என்னை கைவிட்டுவிட்டு, வேறொரு பெண்ணுடன் சேர்ந்து வாழ்ந்து வருவதாகவும் கூறினார். எவ்வாறு இருப்பினும், அவர் நன்றாக இருந்தால் சரி தான் எனவும், நான் உண்மையாகவே காதலித்தேன் எனவும் அவர் கூறினார். அவருடையப் பேச்சிற்கு, பலரும் தங்களுடைய ஆதரவினைத் தெரிவித்து வந்தனர்.

இந்நிலையில், அவர் டிக்டாக் வீடியோக்களை யூடிப்பில் பலரும் பதிவேற்றம் செய்தனர். அதனால், அப்பெண் திடீரென்று வைரல் ஆனார். ஆனால், அவருடையக் கணக்கிற்கு சென்ற சிலர், அப்பெண்ணைத் தகாத வார்த்தைகளால் திட்டினர். இதனால், மனமுடைந்த அந்தப் பெண்ணும், அவருடையத் தங்கையும் விஷமறிந்தியுள்ளனர். இதனை, அவர்கள் வீடியோவாக பதிவு செய்து வெளியிட்டுள்ளனர்.

இவர்கள் விஷம் குடித்ததற்கு, முக்கியக் காரணமாக இருந்தது வேறுயாருமல்ல. நம்முடைய மக்கள் தான். அந்தப் பெண்ணினைப் பற்றி எவ்விதத் தகவலும் தெரியாமல், தகாத வார்த்தைகளால் திட்டித் தீர்த்துள்ளனர். இதனால், அப்பெண் மனமுடைந்து இத்தகைய முடிவினை எடுத்துள்ளார்.

HOT NEWS