ஒயின்ஷாப் வயது வாரியாக வந்து வாங்குவதற்கு டைமிங்! அரசு அறிவிப்பு!

06 May 2020 அரசியல்
liquorline.jpg

தமிழகத்தில் நாளை (07-05-2020) முதல் டாஸ்மாக் கடைகளைத் திறக்க உள்ளதாக, தமிழக அரசு அதிகாரப் பூர்வமாக அறிவித்துள்ளது.

இந்தியாவின் பல மாநிலங்களில் மது விற்பனைக்கு அனுமதி அளிக்கப்பட்டு உள்ளதால், பொதுமக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்நிலையில், தமிழகத்திலும் மதுவிற்பனையானது அனுமதிக்கப்பட்டு உள்ளது. நோய் கட்டுப்பாட்டுப் பகுதிகள் மற்றும் சென்னையினைத் தவிர்த்து, மற்ற பகுதிகளில் ஒயின்ஷாப்புகளை திறக்க அனுமதி அளித்து உத்தரவிடப்பட்டது.

இத்தகைய சூழ்நிலையில், வயது வாரியாக சாராயம் வாங்குவதற்கான அட்டவணையை தமிழக அரசு வெளியிட்டு உள்ளது. அதன்படி, ஒவ்வொரு டாஸ்மாக்கிலும் இரண்டு கான்ஸ்டபிள்கள், இரண்டு தன்னார்வல பணியாளர்கள் கண்டிப்பாக இருக்க வேண்டும். வசதி இருந்தால், ஒன்றுக்கும் மேற்பட்ட மதுபானக் கவுன்டர்களை உருவாக்கி கொள்ளலாம். தடுப்புகள் கட்டாயம் அமைக்கப்பட வேண்டும். சமூக இடைவெளியானது கட்டாயம் பின்பற்றப்பட வேண்டும்.

இவைகளுக்கு பொதுவான பொறுப்பாக எஸ்ஐ மற்றும் இன்ஸ்பெக்டர்கள் நியமிக்கப்பட வேண்டும். ஒவ்வொரு டவுன்களுக்கு உள்ளேயும், இரண்டு பறக்கும் படைகளும், அதிரடிப் படைகளும் இருக்க வேண்டும். ஒவ்வொரு நகரத்திற்குள்ளேயும் நான்கு பறக்கும் படைகளும், அதிரடிப் படைகளும் இருக்க வேண்டும்.

ஒவ்வொரு பறக்கும் படையிலும், ஒரு இன்ஸ்பெக்டர், எஸ்ஐ, பத்து காவலர்கள் இருக்க வேண்டும். அவர்கள் பயன்படுத்தும் வாகனத்தில், ஒலிபெருக்கி இருக்க வேண்டும். பொதுஇடங்களில் உள்ள டாஸ்மாக் கடைகளுக்கும், திருமண மண்டபங்களுக்கும் இடையில், தகுந்த தடுப்பு அரண்கள் அமைக்கப்பட வேண்டும். அங்கு நான்கு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட வேண்டும். 4 ஹோம் கார்ட்ஸ் மற்றும் நான்கு வாலண்டியர்கள் பயன்படுத்திக் கொள்ள அனுமதிக்கப்பட்டு உள்ளது.

ஒரு போலீஸ் வாகனமும் அங்கு இருக்க வேண்டும். அதே போல், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட பகுதிகளில், டாஸ்மாக் திறக்க அனுமதி கிடையாது. மது வாங்குபவர்களில், 50 வயதிற்கு மேல் உள்ளவர்கள், காலை பத்து மணி முதல் மதியம் ஒரு மணி வரையிலும், 40 முதல் 50 வயதுடையவர்கள், மதியம் ஒரு மணி முதல் 3 மணி வரையிலும், 40 வயதிற்கு கீழ் உள்ளவர்கள், மதியம் மூன்று மணி முதல் 5 மணி வரையிலும், மது வாங்க நேரம் ஒதுக்கப்பட்டு உள்ளது.

HOT NEWS