அமெரிக்கா செல்ல உள்ளவர்கள், விசாவிற்காக பதிவு செய்துள்ளவர்கள், கண்டிப்பாக இதனைப் படிக்க வேண்டும். ஏனெனில், இதில் தற்பொழுது அமெரிக்கா எவைகளை எல்லாம் பார்த்து, உங்களுக்கு விசா வழங்கி வருகிறது, என கூறியுள்ளோம்.
இதுவரையில் உங்களுடைய அனைத்துத் தகவல்களையும் பார்த்து விசா வழங்கியது அமெரிக்கா. தற்பொழுது கூடுதலாக, உங்களுடைய சமூக வலைதளங்களின் பயன்பாட்டையும் பார்த்த பின்னரே, உங்களுக்கு விசா வழங்குவது குறித்து முடிவு செய்யப்படுகிறது.
அமெரிக்காவுக்கு, வருடத்திற்கு சுமார் 7,10,000க்கும் அதிகமானோர் விசாவிற்காக விண்ணப்பிக்கின்றனர். அப்படி விண்ணப்பிக்கும் அனைவருக்கும் விசா வழங்கப்படுவதில்லை. இந்நிலையில், தற்பொழுது சமூக வலைதளங்களையும் கண்காணித்தப் பின்னரே விசா வழங்கப்பட உள்ளது. இதனைப் பற்றி, அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல செய்தி நிறுவனம், வெளியிட்டு செய்தியில், அமெரிக்காவிற்கு பாதுகாப்பே பிரதானமான ஒன்றாக கருதப்படுவதால், இத்தகைய சோதனைகள் மற்றும் ஆராய்ச்சிகளை செய்த பின்னரே, விசா வழங்கப்பட்டு வருகின்றது.
அதனால், நீங்கள் அமெரிக்கா செல்வதற்கு, விசா பதிவு செய்திருந்தால், முதலில் உங்கள் சமூக வலைதளங்களில் நீங்கள் வெளியிட்ட போஸ்ட்டுகள், போட்டோக்கள் முதலியவற்றை ஒரு முறைப் பாருங்கள். அமெரிக்கா கடந்த 5 வருடங்களாக, நீங்கள் சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளவற்றைப் பார்த்தப் பின்னரே, அனுமதி வழங்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஏதாவது, வன்முறையாக, அல்லது தீவிரவாதம் சம்பந்தப்பட்ட விஷயங்களை நீங்கள், பதிவிட்டிருந்தால், அதனை முதலில் நீக்குங்கள். அதுவே, உங்கள் விசாவினைப் பெரும்பாலும் காப்பாற்றிவிடும். அதுமட்டுமின்றி, உங்களுடைய மெயில், போன் நம்பர் ஆகியவற்றையும் அமெரிக்கா ஆய்வு செய்யும் என்பது குறிப்பிடத்தக்கது.