பெண்களுக்கு மட்டுமல்ல ஆண்களுக்கும் இந்தப் பிரச்சனை அதிகமாக உள்ளது. இதனை, பின்வறுமாறுப் பார்த்துக் கொண்டாலே, முடி உதிர்வதிலிருந்து எளிதாக விடுபடலாம்.
1) தினமும் காலையில் குளிக்கவும்இதனைப் பார்ப்பதற்கு உங்களுக்கு சிரிப்பு வரலாம். உண்மையில், பலரும் வேலை மற்றும் சூழ்நிலைகளின் காரணமாக, காலையில் குளிப்பதில்லை. மாறாக, மாலை அல்லது மதிய நேரங்களில் குளிக்கின்றனர். இந்த நேரங்ளில் குளிக்கும் பொழுது, நீரும் சூடாக இருக்கும். அந்த சூடான நீரால், நம்முடைய உடல் சூட்டைத் தணிக்க இயலாது. மேலும், முடி உதிர்வதற்கு அதிமுக்கியக் காரணமாக இருப்பது, உடல் சூடு. எனவே, காலையில், ஆறு முதல் ஏழு மணிக்குள் குளிப்பது நல்லது.
2) ஷாம்புக்களைத் தவிரத்தல்டிவியில் விளம்பரங்களில் வரும் ஷாம்புக்களைப், போடக் கூடாது. ஏனெனில், அவை அனைத்துமே கெமிக்கலால் ஆனவை. எந்த ஒரு ஷாம்பும், உண்மையான இயற்கை மூலிகைகளால் செய்யப்படுவதில்லை. எனவே, அவைகளைத் தவிர்க்கவும். கடையில் விற்கபடும் சீகைக்காய்ப் பொடிகளையும் தவிர்க்கவும். இவைகளைத் தவிர்த்தாலே, உங்களுடைய முடி பாதி தப்பித்துவிடும்.
3) கற்றாழையைத் தேய்த்தல்ஒரு சிறிய பூந்தொட்டியை வாங்கி, வீட்டில் வைத்துக் கொள்ளவும். பெரிய அளவில் செலவாகாது. அப்பூந்தொட்டியில், கற்றாழையை நட்டு வளர்க்கவும். வாரம் ஒரு முறை, கற்றாழையை வெட்டி எடுத்துக் கொள்ளவும். அதனை வெட்டும் பொழுது, மஞ்சள் நிறத்தில் ஒரு வித திரவம் வெளியாகும். அதனைப் பயன்படுத்த வேண்டாம். பின்னர், வெட்டியக் கற்றாழையின் தோழை நீக்கி உள்ளே உள்ள ஜெல் போன்ற பகுதியை எடுத்து தலைக்குத் தேய்க்கவும். தலையில், அவைகளைத் தேய்த்து அரை மணி நேரம் நிழலில் அமரவும். வீட்டிற்குள் உட்கார வேண்டாம். பின்னர், தலைக்கு குளிக்க முடி வளர்ச்சி நன்றாக இருக்கும்.
4) வெந்தயம்வெந்தயத்தை இரவிலேயே, நல்ல நீரில் ஊர வைக்கவும். பின்னர், காலையில் குளிப்பதற்கு முன், அதனை நன்றாக மிக்சியில் அரைத்து விடவும். அதில் மிக சிறிய அளவில், நீர் சேர்த்து பசையாக்கிக் கொள்ளவும். பின்னர், அதனை உங்கள் தலையில், குளிப்பதற்கு முன் நன்றாகத் தேய்த்துக் கொள்ளவும். ஒரு கால் மணி நேரம், நன்றாக உங்கள் தலையில் அதனை ஊர விட வேண்டும். பின்னர், குளிக்கவும். இவ்வாறு வாரம் ஒரு முறை செய்யவும்.
வீட்டிலேயே செய்த, சீகைக்காய்ப் பொடியை எடுத்துக் கொள்ளவும். அதில், சிறிதளவு நீர் சேர்த்து குளிக்கும் பொழுது, தலைக்குப் பயன்படுத்தலாம். இதனை வாரம் மூன்று முறை செய்யவும்.
6) ஹெல்மெட்இரு சக்கர வாகனங்களில் செல்லுவோர்க்கு, முடி கொட்டுதல் அதிகமாக இருக்கும். காரணம், ஹெல்மட். ஹெல்மெட் அணிவதால், தலையில் ஏற்படும், அதிக வெப்பத்தின் காரணமாக, முடி உடைந்து விடுகிறது. இதனைத் தடுக்க, தலையில் கர்ச்சிப் அல்லது அதற்காக விற்கப்படும் பிரத்யேகத் துணியைப் பயன்படுத்தும் பொழுது, முடி உடைவது குறையும்.
இத்தகைய முயற்சிகளை செய்யும் பொழுது, முடி உதிர்வது முற்றிலும் குறைந்து, மெதுவாக முடி வளர ஆரம்பிக்கும். இருப்பினும், முப்பது வயதுக்கு மேல் முடி வளராது. ஆனால், இத்தகைய செயல்களால் இருக்கின்ற முடியை நிச்சயமாகப் பாதுகாக்க முடியும்.