திருச்சானூர் பத்மாவதி தாயார் உற்சவம் தொடங்கியது! டிசம்பர் 1 வரை திருவிழா!

23 November 2019 அரசியல்
padmavathi.jpg

திருமலை திருப்பதியில் சென்ற மாதம், ஏழுமலை வெங்கடேஷனுக்கு நடத்தப்படும் பிரம்மோற்சவம் நடைபெற்று முடிந்தது. அதனையடுத்து, திருச்சானூர் பத்மாவதி தாயாரின் உற்சவம் இன்று தொடங்கியுள்ளது.

கார்த்திகை மாதத்தில் பத்மாவதி தாயார் பிறந்ததால், இந்த மாதத்தில் பத்மாவதி தாயாருக்கு திருவிழா நடைபெறுகின்றது. இன்று காலையில் கொடியேற்றத்துடன் இவ்விழா தொடங்கியது. இதனைத் தொடர்ந்து, இன்று த்வாஜரோஹணம் மற்றும் சின்ன ஷேஷ வாகன சேவையும் நடைபெற உள்ளது.

நவம்பர் 24ம் தேதி அன்று, காலையில் பெரிய ஷேஷ வாகன சேவையும், மாலையில் ஹம்ச வாகன சேவையும் நடைபெற உள்ளது. 25ம் தேதி அன்று காலையில் முத்துப் பந்தல் வாகன சேவையும், மாலையில் சிம்ம வாகன சேவையும் நடைபெறும். 26ம் தேதி அன்று கல்ப விருஷப வாகன சேவையும், மாலையில் ஆஞ்சநேய வாகன சேவையும் நடைபெற உள்ளது. 27ம் தேதி அன்று, காலையில் பல்லாக்கு உற்சவமும், மாலையில் யானை வாகன சேவையும் நடைபெறும்.

28ம் தேதி அன்று, காலையில் சர்வ பூபால வாகன சேவையும், மாலையில் தங்க ரதம் மற்றும் கருட வாகன சேவையும் நடைபெறும். 29ம் தேதி அன்று, காலையில் சூர்ய பிரபை வாகனத்திலும், மாலையில் சந்திர பிரபை வாகனத்திலும் தாயார் உலா வருகின்றார். 30ம் தேதி அன்று, காலையில் ரத உற்சவமும், மாலையில் குதிரை வாகன சேவையும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

டிசம்பர் ஒன்றாம் தேதி, காலையில் சக்கர ஸ்நானமும், பஞ்சமி தீர்த்தமும், மாலையில் த்வாஜ அவரோஹணமும் நடைபெறும். டிசம்பர் 2ம் தேதி அன்று புஷ்ப யாகத்துடன் இந்த ஆண்டுக்கான பிரம்மோற்சவம் நிறைவடைகிறது. இந்தத் திருவிழாவினைக் காண்பதற்கு, லட்சகணக்கான பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.

HOT NEWS