திருப்பதி பிரம்மோற்சவம்! மோகினி அவதாரத்தில் ஏழுமலையான்! பக்தர்கள் பரவசம்!

04 October 2019 அரசியல்
garudasevai.jpg

திருமலை திருப்பதியில், வருடாந்திர பிரம்மோற்சவ திருவிழா கடந்த 30ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி, கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகின்றது.

இந்த திருவிழாவின் ஒவ்வொரு நாளும், மலையப்ப சுவாமிகள், ஒவ்வொரு திருக்கோலத்திலும் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். திருவிழாவின் ஐந்தாம் நாளான இன்று காலை, மோகினி அவதாரத்தில், தங்கப் பல்லக்கில் எழுந்தருளினார். அவரைக் காண்பதற்கு, லட்சக் கணக்கான பக்தர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர். அவர்களுக்கு வேண்டிய வசதிகளை, திருப்பதி தேவஸ்தானம் செய்து கொடுத்துள்ளது.

ஆண்டாள் மலையை அணிந்து கொண்டு, மலையப்பர் இன்று காலையில் மோகினி திருக்கோலத்தில் மாட வீதிகளில் பவனி வந்தார். இன்று மாலை நடைபெறும் வீதி உலாவில் கருட வாகனத்தில் உலா வர உள்ளார். இதற்கான, ஏற்பாடுகள் தற்பொழுது நடைபெற்று வருகின்றன.

பெருமாளைக் கண்ட பக்தர்கள், கோவிந்தா கோஷம் முழங்க அவரை தரிசித்து வருகின்றனர். திருமலையில், இந்த பிரம்மோற்சவத் திருவிழா ஆண்டுதோறும் நடைபெற்று வருகின்றது. ஒவ்வொரு ஆண்டும், பக்தர்களின் எண்ணிக்கை கூடிக் கொண்டே இருப்பது குறிப்பிடத்தக்கது.

HOT NEWS