கொரோனா வைரஸ் திருப்பதி தேவஸ்தானம் முக்கிய அறிவிப்பு!

11 March 2020 அரசியல்
thirupathimalai.jpg

கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் வேகமாகப் பரவி வருகின்ற நிலையில், திருமலை திருப்பதி தேவஸ்தானமானது, முக்கிய அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.

திருமலை திருப்பதியில் உள்ள வெங்கடேச பெருமாளைத் தரிசிக்க, தினமும் முப்பதாயிரம் முதல் ஐம்பதாயிரம் பக்தர்கள் கோயிலுக்கு வருகின்றனர். அவர்கள், உண்பதற்கு, தங்குவதற்கு என அனைத்து வசதிகளையும், திருப்பதி தேவஸ்தானமே செய்து கொடுக்கின்றது. இதனால், அங்கு வரும் பக்தர்கள் மிக எளிதாக, எவ்வித தொந்தரவும் இன்றி, பெருமாளை தரிசிக்கின்றனர்.

இந்நிலையில், கொரோனா வைரஸ் வேகமாகப் பரவி வருவதால், பக்தர்களின் பாதுகாப்பிற்காக புதிய அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டுள்ளது. அதன் படி, திருப்பதி வெங்கடேசப் பெருமாளை தரிசிக்க வருபவர்களுக்கு, சளி, இருமல், காய்ச்சல் முதலான பிரச்சனைகள் இருந்தால், சில காலத்திற்கு மட்டும் கோயிலுக்கு வருவதைத் தவிர்க்கவும் என, கேட்டுக் கொண்டுள்ளது. இருமல் மூலமும், சளி மற்றும் காய்ச்சல் மூலமும் இந்த கொரோனா வைரஸ் பரவும் என்பதால், இவ்வாறு அறிவுறுத்தியுள்ளது.

மேலும், கோயிலின் பாதைகளை மற்றும் பொதுமக்கள் கோயிலுக்குள் நடக்கும் இடங்களையும், ஒவ்வொரு இரண்டு மணி நேரமும் சுத்தம் செய்ய உத்தரவிட்டும் உள்ளது. கோயிலுக்குள் இருப்பவர்கள், இருமல் முதலானப் பிரச்சனைகள் இருந்தால், முகத்தில் முகமூடி அணிந்து கொள்ளவும் கூறியுள்ளது. இருமல் முதலானவைகளால், மூன்று அடி தூரத்திற்கு இந்த வைரஸானது பரவும் எனக் கேட்டுக் கொண்டுள்ளது.

வயதானவர்கள், கர்ப்பிணி பெண்கள் மற்றும் குழந்தைகளுடன் வருபவர்களுக்கு, விரைவு தரிசனத்திற்கு தற்காலிக ஏற்பாடுகளை செய்திருப்பதாகவும், பக்தர்கள் இதனைப் பயன்படுத்திக் கொண்டு பயனடையவும் கூறியுள்ளது.

HOT NEWS