திருப்பதி லட்டின் விலை பாதியாகக் குறைப்பு! தேவஸ்தானம் அறிவிப்பு!

22 May 2020 அரசியல்
ladu.jpg

திருமலை திருப்பதியில் லட்டு விற்பனையானது, தற்பொழுது நடத்தப்பட உள்ளதாக, திருப்பதி தேவஸ்தானம் கூறியுள்ளது.

இந்தியா முழுவதும் வருகின்ற மே-31ம் தேதி வரை, ஊரடங்கு உத்தரவானது அமலில் உள்ளது. இதனால், பொதுஇடங்கள், கோயில்கள் மூடப்பட்டு உள்ளன. திருப்பதி கோயிலும் கடந்த இரண்டு மாதங்களாக மூடப்பட்டு உள்ளன. இதனால், அந்தக் கோயிலின் வருமானம் கணிசமாகப் பாதிக்கப்பட்டு உள்ளது. கிட்டத்தட்ட 400 கோடி ரூபாய் அளவிற்கு பணத் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளதாக, திருப்பதி தேவஸ்தானம் ஏற்கனவே அறிவித்து இருந்தது.

இந்நிலையில், தற்பொழுது அந்தக் கோயிலின் லட்டானது வெளியில் உள்ள டிரஸ்ட் ஆபிஸ்களின் மூலம் விற்கப்பட உள்ளன. திருப்பதி லட்டானது, உலகப் பிரசித்தி பெற்றது. அந்த லட்டிற்கு, புவிசார் குறியீடு மட்டுமல்ல, காப்புரிமையும் உள்ளது. இவ்வளவு பிரசித்திப் பெற்ற லட்டின் விலையானது, தற்பொழுது உயர்த்தப்பட்டு உள்ளது. ஒரு லட்டின் விலையானது, 50 ரூபாயாக உயர்த்தப்பட்டு உள்ளது.

தற்பொழுது ஊரடங்கின் காரணமாக, இந்த விலையினை 25 ரூபாயாக குறைத்து, தன்னுடையக் கட்டுப்பாட்டில் தேவஸ்தானத்திற்குச் சொந்தமான அலுவலகங்களின் மூலம் விற்க திட்டமிடப்பட்டு உள்ளது. இந்த லட்டுக்கள் திருமலையில் இருந்து சென்னை, பெங்களூர், கேரளா, உள்ளிட்டப் பல பகுதிகளுக்கு இன்னும் ஓரிரு நாட்களில் சென்றடையும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேலும், இந்த லட்டுக்களை எவ்விதத் தடையுமின்றி வாங்கிச் செல்லவும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

HOT NEWS