திருப்பதி லட்டுகள் விற்பனைக்கு வந்துள்ள நிலையில், தமிழகத்தில் எப்பொழுது கோயில் திறக்குமோ அப்பொழுது தான், திருப்பதி லட்டுகள் கிடைக்கும் என, திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
திருப்பதி ஏழுமலையான் கோயிலானது, கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பாக மூடப்பட்டது. கொரோனா வைரஸ் பரவி வருவதைத் தொடர்ந்து, அந்தக் கோயிலுக்குள் பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. இப்படிப்பட்ட சூழ்நிலையில், கோயிலின் செலவீனங்களைக் கருத்தில் கொண்டு, உலகப் பிரசித்தப் பெற்ற திருப்பதி லட்டானது, 50% விலைத் தள்ளுபடியுடன் விற்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
அதன்படி, 25 ரூபாய்க்கு திருப்பதி லட்டு விற்பனைக்கு வந்தது. ஆந்திராவில் உள்ள பல திருப்பதி தேவஸ்தானங்களுக்கு சொந்தமான நிறுவனங்கள் மற்றும் அலுவலகங்களிலும், தமிழகத்தில் உள்ள அலுவலகங்களிலும் விற்கப்படும் எனக் கூறப்பட்டது. இந்நிலையில், தமிழகத்தில் இந்த லட்டுக்களைக் கொண்டு வந்த விற்பதில், சிக்கல்கள் ஏற்பட்டு உள்ளன.
இதனைத் தொடர்ந்து, அந்த கோயிலின் தேவஸ்தானம் புதிய தகவலை வெளியிட்டுள்ளது. அதன்படி, தமிழகத்தில் உள்ள கோயில்கள் திறக்கப்பட்ட உடன், திருப்பதி லட்டுக்கள் விற்பனைக்கு வரும் எனவும், அதுவரை விற்பனைக்கு தமிழகத்தில் இந்த லட்டுக்கள் கிடைக்காது எனவும் கூறப்பட்டு உள்ளது.