பிரபல அமெரிக்க நிறுவனத்தின் தகவல்கள் ஹேக் செய்யப்பட்டது

10 March 2019 தொழில்நுட்பம்
tmobile1.jpg

உலகளவில் பிரசித்திப் பெற்ற நிறுவனம் டி-மொபைல் இந்நிறுவனம் டெலிகாம் துறையில் உலகின் மிகவும் முக்கியமான மிகப் பெரிய நிறுவனம் ஆகும். இதன் பயனர்களின் தகவல்கள், தற்பொழுது ஹேக் செய்யப்பபட்டுள்ளதாக அந்நிறுவனம் ஒப்புக் கொண்டுள்ளது.

கடந்த ஆகஸ்ட் 20ம் தேதி அன்று இந்நிறுவனத்தின் சர்வரிலிருந்து சுமார் 20 லட்சம் பயனாளிகளின் போன் நம்பர்கள், பாஸ்வேர்ட், மெயில் ஐடி, முகவரி, அக்கவுண்ட் நம்பர் மற்றும் பயனாளிகளின் அக்கவுண்ட் பற்றியத் தகவல்கள் திருடப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

இருப்பினும், எந்த ஒரு பயனாளிகளின் கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு, சோசியல் செக்யூரிட்டி எண்கள் மற்றும் வங்கிக் கணக்குகள் பற்றியத் தகவல்கள் ஹேக் செய்யப்படவில்லை என அந்நிறுவனம் உறுதியளித்துள்ளது.

அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த சம்பவம் துரதிர்ஷ்டவசமானது என்றும், மேலும் இது போன்ற நிகழ்வுகள் நடக்காமல் இருக்க தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உறுதி அளிக்கப்பட்டுள்ளது. டி-மொபைல் நிறுவனத்தின் பாதுகாப்பு அதிகாரிகள் இதனைப் பற்றி சோதனை நடத்தி வருகின்றனர் எனவும், மேலும், திருடர்கள் கண்டுபிடிக்கப்பட்டால், கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.

இருப்பினும், எவ்வாறு, ஹேக்கர்கள் அதன் சர்வர்களை ஹேக் செய்தனர் என்ற விஷயத்தைக் கூறவில்லை. மேலும், அதன் உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில்,”எங்கள் நிறுவனத்தின் 77மில்லியன் பயனாளிகளில் 3 சதவீதத்தினரின் தகவல்கள் மட்டுமே கசிந்துள்ளது. வரும் காலங்களில் இது போன்ற, நிகழ்வுகள் நடக்காமல் இருக்க கடுமையான பாதுகாப்பு அமைப்புகள் உருவாக்கப்படும் என கூறியுள்ளார்.

டி-மொபைல் நிறுவனம், அதன் பயனாளிகளிடம் வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளது. அதன்படி, எஸ்எம்எஸ், மெயில் மூலமாகவோ அல்லது தொலைபேசி மூலமாகவோ யாராவது உங்களுடைய பணப்பரிமாற்றம் பற்றியத் தகவல்களைக் கேட்டால் தர வேண்டாம் என்று கேட்டுக் கொண்டுள்ளது. உலகின் மிகப் பெரிய நிறுவனத்திற்கே இந்நிலை என்றால், இந்தியா போன்ற நாடுகளில் உள்ளவர்களின் நிலையைப் பற்றி நாம் சற்று யோசிக்க வேண்டும்.

HOT NEWS