தன்னார்வலர்கள் உதவி செய்யத் தடையில்லை! அரசு அறிவிப்பு!

13 April 2020 அரசியல்
edappadipalanisamy.jpg

திமுக தொடுத்த வழக்கில், தன்னார்வலர்கள் உதவி செய்யத் தடையில்லை என, தமிழக அரசு அறிவித்துள்ளது.

இது குறித்து, தமிழ்நாடு அரசு செய்திக் குறிப்பு ஒன்றினை வெளியிட்டுள்ளது. அதில், தன்னார்வலர்கள், தொண்டு நிறுவனங்கள், அரசியல் கட்சி பிரமுகர்கள் மற்றும் பிற அமைப்புகளை சார்ந்த அனைவரும், ஊரடங்கு அமலில் உள்ள இத்தருணத்தில் பொருட்களை நேரடியாக மக்களுக்கு வழங்கி, வைரஸ் தொற்றுக்கு வழிவகுப்பதை தவிர்க்க கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

அவ்வாறு உதவி செய்ய விரும்பினால், பொருட்களை அந்தந்த மாவட்ட கலெக்டர்களிடமோ அல்லது மாநகராட்சியாக இருந்தால் மாநகராட்சி கமிஷனரிடமோ, நகராட்சியாக இருந்தால் அந்தந்த நகராட்சி கமிஷனரிடமோ, பேரூராட்சியாக இருந்தால் செயல் அலுவலரிடமோ அல்லது ஊராட்சி ஒன்றியங்களில் வட்டார வளர்ச்சி அலுவலரிடமோ வழங்கலாம்.

அவர்கள் அதை ஏழை, எளிய மக்களுக்கு சமூக இடைவெளியை கடைப்பிடித்து வழங்குவதற்கு உரிய நடவடிக்கைகளை எடுப்பார்கள். எனவே, இதற்கு அனைத்து தரப்பினரும் முழு ஒத்துழைப்பும் நல்க வேண்டும் என கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இந்த அறிவுரைகளை மீறி யாரேனும் செயல்பட்டால், அரசின் ஊரடங்கு உத்தரவை மீறியதாக கருதி, அவர்கள் மீது உரிய சட்டப்படியான நடவடிக்கையை எடுக்க மாவட்ட கலெக்டர்களும், காவல்துறை அலுவலர்களும் அறிவுறுத்தப்படுகிறார்கள் எனத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

தொண்டு நிறுவனங்களுக்கும், சமூக ஆர்வலர்களுக்கும் தடை விதிக்கப்படவில்லை எனவும், அறிவிக்கப்பட்டுள்ள விதிகளை முறையாகப் பின்பற்ற வேண்டும் எனவும் கூறப்பட்டு உள்ளது.

HOT NEWS