நவம்பர் 6ம் தேதி வெற்றிவேல் யாத்திரை! தயாராகும் தமிழக பாஜக!

26 October 2020 அரசியல்
tnvetrivelyatra.jpg

நவம்பர் 6ம் தேதி முதல், தமிழக பாஜக தலைவர் எல் முருகன் தன்னுடைய வெற்றிவேல் யாத்திரையினை துவங்க உள்ளார்.

தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக, சர்ச்சைக்குரியதாகப் பார்க்கப்படும் விஷயமாக முருகனைப் பற்றிய பேச்சு இருந்து வருகின்றது. கருப்பர் கூட்டம் யூடியூப் சேனல் மூலம், முருகனைப் பற்றி தரக் குறைவாகப் பேசியதால், இந்துக்கள் பலரும் கொதித்து எழுந்தனர். அவர்கள் மத்தியில், இது குறித்த கடும் அதிருப்தியானது நிலவி வருகின்றது. அதனை தொடர்ந்து, தமிழக அரசு கடும் நடவடிக்கைகளை எடுத்தது கருப்பர் கூட்டம் யூடியூப் சேனலைச் சேர்ந்தவர்கள், குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்த சூழ்நிலையில், அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக, வேல் பூஜையானது தமிழக பாஜகவினரால் நடைபெற்றது. இதில், பலரும் ஆர்வமுடன் கலந்து கொண்டனர். இந்த நிலையில், தொடர்ந்து இந்தப் பிரச்சனையினைப் பற்றிப் பேசி வருகின்றது பாஜக. தமிழக சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் 6 மாதங்களே உள்ள நிலையில், இந்த பிரச்சனையினைப் பயன்படுத்தி, வாக்கு சேகரிக்கும் முயற்சியில் பாஜக ஈடுபட்டு உள்ளது.

தமிழக பாஜக தலைவர் எல் முருகன், இன்று தமிழக பாஜக தலைமையகமான கமலாலயத்தில் நடைபெற்ற பூஜையில் கலந்து கொண்டார். அவர் காப்பு கட்டும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு காப்புக் கட்டிக் கொண்டார். அந்த நிகழ்ச்சியினைத் தொடர்ந்து, வருகின்ற நவம்பர் ஆறாம் தேதி முதல் வெற்றிவேல் யாத்திரையானது நடைபெற உள்ளது. இந்த யாத்திரையானது, தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் நடைபெற உள்ளது என, அறிவிக்கப்பட்டு உள்ளது.

HOT NEWS