ஐந்தாம் வகுப்பு வரை விடுமுறை! அறிவிப்பினை உறுதி செய்த முதல்வர்!

16 March 2020 அரசியல்
edappadipalaniswami.jpg

கொரோனா வைரஸ் பாதிப்பின் காரணமாக, தமிழகத்தில் உள்ள ஐந்தாம் வகுப்பு வரை உள்ள அனைத்துப் பள்ளி மாணவர்களுக்கும், விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.

முதலில், பள்ளிக்கல்வித்துறை சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டு இருந்தாலும், பின்னர் விடுமுறை இருக்குமா என்ற சந்தேகம் எழுந்தது. அவைகளைத் தீர்த்து வைக்கும் பொருட்டு, தமிழக முதல்வர் எடப்பாடி.கே.பழனிசாமி காணொளியில் பதிலளித்தார். அதில், கொரோனா வைரஸ் பரவாமல் இருக்க, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகளில் பயிலும், ப்ரீகேஜி, எல்கேஜி, யூகேஜி பயிலும், மாணவ, மாணவிகளுக்கு விடுமுறை அறிவித்து உத்தரவிட்டார்.

இந்த விடுமுறையானது, இன்று (மார்ச் 16) தொடங்கி மார்ச் 31ம் தேதி வரை என அறிவிக்கப்பட்டு உள்ளது. இதனால், பள்ளி மாணவ, மாணவிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும், கேரள மாநிலத்தினை ஒட்டியுள்ள திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி, விருதுநகர், தேனி, கோயம்புத்தூர், நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களில், ப்ரீகேஜி முதல், ஐந்தாம் வகுப்பு வரைப் பயிலும் மாணவ மாணவிகளுக்கு மார்ச் 31ம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.

HOT NEWS