உதவி கேட்ட தமிழர்! உடனடியாக செய்த முதல்வர்! நெகிழ்ச்சிய சம்பவம்!

13 April 2020 அரசியல்
edappadipalaniswami.jpg

தற்பொழுது தமிழகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவானது அமலில் உள்ளது. இது மேலும் நீட்டிக்கபடலாம் எனவும், எதிர்பார்க்கப்படுகின்றது. இந்நிலையில், அத்தியாவசியப் பொருட்களைத் தவிர்த்து, மற்ற எவ்விதக் காரணத்திற்காகவும் பொதுமக்கள் வெளியில் நடமாடக் கூடாது என, மத்திய, மாநில அரசுகள் வேண்டுகோள் விடுத்துள்ளன.

இதனை முன்னிட்டு, பலரும் தங்களுடைய வீடுகளுக்குள்ளேயே இருக்கின்றனர். ஒரு சில மருத்துவத் தேவைகளுக்காக வெளியில் செல்ல அனுமதி வழங்கப்படுகின்றது. இந்நிலையில், டிவிட்டரில் வேண்டுகோள் விடுக்கும் நபர்களுக்கு, தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உடனடி உதவிகளை செய்து கொடுத்து வருகின்றார்.

இன்று காலையில், (13-04-2020) டிவிட்டரில் சார், தயவுசெய்து ஒரு நாளாவது கேப் கொடுங்கள் ப்ளீஸ். என் மனைவி 9 மாத கர்ப்பமாக இருக்கிறார். அவளுடன் யாருமே இல்லை. நான் பக்கத்து மாவட்டத்தில் மாட்டிக் கொண்டேன். முதல் குழந்தை வேறு. தனியாக எப்படிச் சமாளிப்பாள். 108க்கு கால் பண்ணாலும் கூட யாராவது இருக்கணும். பாஸுக்கு அப்ளை பண்ணினேன். அதற்கு பதில் இல்லை. முக்கியமான மேட்டர் இல்லையா" என பையஸ் அர்சி என்பவர் வேண்டுகோள் எழுப்பினார்.

இது தமிழக முதல்வரின் கவனத்திற்குச் சென்றது. இதற்குப் பதிலளித்த எடப்பாடி பழனிசாமி, உடனடியாக தங்களை தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்ணை தெரிவிக்கவும் தம்பி. நிச்சயமாக தாயையும், சேயையும் பாதுகாக்கத் தேவையான அனைத்து உதவிகளையும் அரசு செய்து கொடுக்கும் என்று தெரிவித்தார். இது தற்பொழுது அனைவரது பாராட்டினையும் பெற்றுள்ளது.

HOT NEWS