கொரோனா வைரஸ் குறித்து முதலமைச்சரின் அதிரடி அறிவிப்புகள்!

24 March 2020 அரசியல்
edappadicm1.jpg

தடை உத்தரவால் கர்ப்பிணிப் பெண்கள், முதியோர்களுக்கு ஏற்படும் இடையூறுகளை அறிந்து அவற்றை தணிக்க உரிய நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியர்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள். இக்காலத்தில் உணவு, மருந்துகளின் போக்குவரத்திற்கும், விற்பனைக்கும் யாதொரு தடையும் இல்லை.

வீடுகளில் இல்லாமல், விடுதிகள் மற்றும் பிற இடங்களில் தங்கியிருக்கும் பல்லாயிரக்கணக்கான பணியாளர்கள் நலன் கருதி பார்சல் மூலம் மட்டும் உணவு வழங்கும் வகையில் உணவகங்கள் திறந்திருக்க அனுமதிக்கப்படும். அம்மா உணவகங்கள் வழக்கம் போல் செயல்படும்.

அத்தியாவசிய கட்டடப் பணிகள் தவிர பிற கட்டடப் பணிகளுக்கு தடை விதிக்கப்படுகிறது. எனினும் இந்த நாட்களில் வேலைக்கு வராத தொழிலாளர்களுக்கு சம்பள நிறுத்தம் செய்யக் கூடாது. அத்தியாவசியமான பொருட்களை தயாரிக்கும் தொழிற்சாலைகள் மற்றும் ஏற்றுமதி நிறுவனங்கள் குறைந்த பணியாளர்களுடன் இயங்க அனுமதிக்கப்படுகிறது.

தனியார் நிறுவனங்கள், தகவல் தொழில்நுட்ப மற்றும் உயிர் தொழில்நுட்ப தொழில் அலுவலகப் பணியாளர்கள் வீட்டிலிருந்தே வேலை செய்ய வேண்டும். அத்தியாவசிய மற்றும் மருத்துவம் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ளும் தனியார் நிறுவனங்கள், மருத்துவமனைகள் தொடர்ந்து இயங்கும்.

அத்தியாவசிய பொருட்களுக்கான பால், காய்கறி, மளிகை, இறைச்சி, மீன் கடைகள் போன்றவை தவிர, அனைத்து கடைகளும், வணிக வளாகங்களும், பணிமனைகளும் இயங்காது. அத்தியாவசிய துறைகள், அலுவலகப் பணிகள் தவிர மற்ற அரசு அலுவலகங்கள் செயல்படாது.

மாநிலங்களுக்கு இடையேயும், மாவட்டங்களுக்கு இடையேயுமான போக்குவரத்து அத்தியாவசிய இயக்கத்திற்கு தவிர மற்றவற்றிற்கு முற்றிலும் தடை செய்யப்படுகிறது. அத்தியாவசிய அவசிய பணிகள் தவிர மற்ற பொது போக்குவரத்து, தனியார் போக்குவரத்து, மகிழுந்துகள், ஆட்டோ,டாக்ஸி போன்றவை இயங்காது.

தொற்று நோய்கள் சட்டம், 1897-ல் ஷரத்து 2-ன் படி நாளை மாலை 6 மணி முதல் 31.3.2020 வரை மாவட்ட எல்லைகளை மூட உத்தரவிடப்படுகிறது. அனைத்து காவல் ஆணையர்களும், மாவட்ட ஆட்சி தலைவர்களும் "குற்றவியல் நடைமுறை சட்டப் பிரிவு 144-ன் கீழ் உரிய உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டும்.

அரசு #coronavirus நோய் தடுப்பு பணிகளில் முழு மூச்சுடன் செயல்பட்டு வருகிறது. தடுப்பு பணிகளில் அர்ப்பணிப்பு உணர்வோடு செயல்பட்டு வரும் மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மைப் பணியாளர்கள் உள்ளிட்ட அனைத்து துறை பணியாளர்களுக்கும் அரசு சார்பில் பாராட்டுதல்கள்.

விமான நிலையத்தில் 2,05,391 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டு, வீட்டு கண்காணிப்பில் 9,424 பேர் உள்ளனர். அரசு கண்காணிப்பில் 198 பேர் உள்ளனர். அரசு மருத்துவமனையில் Isolation Ward -ல் 54 பேர் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அத்தியாவசிய பொருட்கள் விநியோகம் செய்யப்படும் மளிகை கடைகள், காய்கறி, பழக் கடைகள், பால் அங்காடிகள் போன்ற இடங்களில் உள்ளாட்சி அமைப்புகள் முறையாக கண்காணித்து தூய்மைப்படுத்த வேண்டும். காவல்துறை இத்தகைய இடங்களில் மக்கள் அதிகம் கூடாதவாறு கண்காணிக்க வேண்டும்.

தனியார் மருத்துவமனைகளில் படுக்கை வசதிகளில் தனிமைப்படுத்தப்பட்ட நோயாளிகளின் மருத்துவ சேவைக்கென 25% ஒதுக்க வேண்டும். சோதனைச் சாவடிகளில் போக்குவரத்து துறை அதிகாரிகள் மற்றும் காவல் துறை அதிகாரிகள் அதிக அளவில் ஈடுபடுத்தப்பட வேண்டும்.

வெளிநாடு பயணித்தோர் மற்றும் அவர்களுடன் தொடர்பில் இருந்தோர் ஆகியோரை தீவிரமாக கண்காணித்து, சமுதாயநலன் கருதி "சுய தனிமைப்படுத்துதல்" மூலம் அவர்கள் யாரும் பொதுமக்களுடன் தொடர்பு கொள்ளாமல் இருப்பதை கண்காணிக்க உத்தரவு.

HOT NEWS