புதிய வேலைவாய்ப்பு இணையதளம்! முதல்வர் துவக்கி வைத்தார்!

17 June 2020 அரசியல்
epstnprivatejobs.jpg

தமிழக இளைஞர்களுக்காக புதிய வேலைவாய்ப்பு இணையதளத்தினை, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி துவக்கி வைத்தார்.

தமிழகத்தில் தலையாயப் பிரச்சனைகளுள் ஒன்றாக இருப்பது வேலையில்லா திண்டாட்டம் ஆகும். இந்தப் பிரச்சனைக்கு முடிவு கட்டுவதற்காக, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, கடந்த ஆண்டு வெளிநாடுகளுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். இதனைத் தொடர்ந்து தற்பொழுது புதிதாக, வேலைத் தேடும் இளைஞர்களுக்காக ஒரு இணையதளத்தினை அறிமுகம் செய்து உள்ளார்.

www.tnprivatejobs.tn.gov.in என்ற இணைய தளத்தினை, தமிழகத்தின் தலைமை செயலகத்தில் இருந்து இன்று காலையில் காணொளி வாயிலாகத் துவக்கி வைத்தார். இதன் மூலம், தமிழக இளைஞர்கள் புதிய தனியார் வேலைவாய்ப்புகள் பற்றி அறிந்து கொள்ள இயலும். அதே போல், இணைய வழி நீட் தேர்விற்கான பயிற்சிகளையும் துவக்கி வைத்தார்.

12ம் வகுப்பு முடித்தப் பின்னர், நீட் தேர்விற்காக தயாராகும் மாணவர்களுக்காக ஆம்பிசாஃப்ட் டெக்னாலஜிஸ் என்ற நிறுவனத்துடன் இணைந்து, நீட் தேர்விற்கானப் பயிற்சியானது இணையத்தின் மூலம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. இதுவரை, சுமார் 7420 மாணவ, மாணவியர் இதற்காக முன்பதிவு செய்துள்ளதாகவும் தமிழக அரசு சார்பில் கூறப்பட்டு உள்ளது.

HOT NEWS