கேரள முதல்வருக்கு டிவிட்டரில் தகவல் சொன்ன தமிழக முதல்வர்!

04 April 2020 அரசியல்
epalanisami.jpg

இந்தியா முழுவதும் கொரோனா வைரஸானது வேகமாகப் பரவி வருகின்றது. தென் இந்தியாவினைப் பொறுத்த வரையிலும், கேரளா மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநிலங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டு உள்ளன.

இந்நிலையில், தமிழக மக்கள் மீது அதிகம் பாசம் வைத்துள்ள மாநிலங்களுள் ஒன்று தான் கேரளா. சுனாமி, சென்னையில் ஏற்பட்ட வெள்ளம் உள்ளிட்டப் பிரச்சனைகளில், தாமாக முன்வந்து உதவிக்கரம் நீட்டிய மாநிலம் ஆகும்.

அதே போல், தமிழகம் ஒன்றும் சளைத்தது அல்ல. கேரளாவில் ஏற்பட்ட வெள்ளத்தின் பொழுது, பொதுமக்கள் பலரும் சாரை சாரையாக, கேரளாவிற்குச் சென்று, பல உதவிகளைச் செய்தனர். இதே போல், தமிழகமும் கேரளமும் இக்கட்டான சூழ்நிலையில் உள்ளது.

இது குறித்து பேசியுள்ள தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, தமிழக மக்களை சகோதர, சகோதரிகளாக கேரள மாநிலம் என்றும் அன்புடன் பார்த்து வருகின்றது. இதனை நினைத்து நான் மகிழ்ச்சியடைகின்றேன். நம்முடைய நட்புறவை போற்றுவோம் எனவும், நம்முடைய சகோதரத்துவம் வளரட்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.

HOT NEWS