செப்டம்பருக்குள் தேர்வு வைக்க இயலாது! முதல்வர் பழனிசாமி கடிதம்!

12 July 2020 அரசியல்
epscm.jpg

வருகின்ற செப்டம்பர் மாதத்திற்குள் அனைத்துப் பல்கலைக் கழகங்கள் மற்றும் கல்லூரிகளில், தேர்வுகளை வைக்கும் நிலைமை தமிழகத்தில் இல்லை என, முதல்வர் பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.

இந்தியா முழுக்க கொரோனா வைரஸானது, நாளுக்கு நாள் வேகமாகப் பரவிக் கொண்டே இருக்கின்றது. இந்த சூழ்நிலையில், வருகின்ற செப்டம்பர் மாதத்திற்குள் இந்தியாவில் உள்ள அனைத்துக் கல்லூரிகளும், பல்கலைக் கழகங்களும் தங்களுடைய மாணவர்களுக்கு செமஸ்டர் தேர்வினை வைத்து முடித்திருக்க வேண்டும் என, யூஜிசி குழுவானது அறிவித்தது. மத்திய உள்துறை அமைச்சகத்தின் பரிந்துரையின் அடிப்படையில், இந்த செயலை செய்தது.

இதற்கு மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இது குறித்து, இன்று மத்திய மனிதவள மேம்பாட்டுக் கழகத்திற்கு, தமிழக முதல்வர் பழனிசாமி கடிதம் ஒன்றினை எழுதியிருக்கின்றார். அதில், பல்கலைக்கழக மற்றும் கல்லூரிகளின் தேர்வுகள் குறித்து, மாநில அரசுகளே முடிவெடுக்க அதிகாரம் தேவை என்றுக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் போக்ரியலுக்கு அவர் எழுதியுள்ளக் கடிதத்தில், செப்டம்பர் மாதத்தில் நடத்த வேண்டும் என்றுக் கூறிய செமஸ்டர் தேர்வுகள் குறித்த உத்தரவினை மறுபரீசிலனை செய்ய வேண்டும் என்றும், பல்கலைக் கழக மானியக்குழு உள்ளிட்ட அமைப்புகளுக்கு இது குறித்த அறிவுறுத்தல்களை வழங்கவும் கோரிக்கை விடுத்துள்ளார்.

கொரோனா வைரஸ் பெருந்தொற்று காரணமாக, செமஸ்டர் தேர்வினை மாணவர்கள் எதிர்கொள்வதில் சிக்கல்கள் நேரிடும். எனவே, செப்டம்பர் மாதத்தில் செமஸ்டர் தேர்வினை இந்த செப்டம்பர் மாதத்திற்குள் நடத்தும் சூழல் தமிழகத்தில் இல்லை என, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

HOT NEWS