ஊரடங்கினை நீட்டிக்க வாய்ப்பிலை! தமிழக முதல்வர் பேட்டி!

08 July 2020 அரசியல்
epscm.jpg

இனி தமிழகத்தில் ஊரடங்கினை நீட்டிக்க வாய்ப்பில்லை என, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

நேற்று பல்வேறு நலத்திட்டப் பணிகளை தொடங்கி வைத்த அவர், செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்பொழுது செய்தியாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு அவர் பதிலளித்தார். அவர் பேசுகையில், தமிழகத்தில் சமூகப் பரவல் ஏற்படவில்லை எனவும், தமிழகத்தில் கொரோனா வைரஸானது கட்டுப்பாட்டிற்குள் உள்ளது எனவும் கூறினார்.

சுமார் 105 நாட்கள் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு இருக்கின்றது. முழுக்க முழுக்க ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு இருப்பதால், வாழ்வாதாரம் மிகப் பெரிய சவாலாக மாறிவிடும். ஒரு பக்கம் நோய்பரவலைத் தடுக்க வேண்டும் என்றால், மறுபக்கம் பொதுமக்களின் வாழ்வாதாரத்தினைப் பார்க்க வேண்டும். இந்த ஊரடங்கில் பல சிரமங்கள் ஏற்பட்டாலும், முழுமையாக ஒத்துழைப்பு அளித்த நம் மக்களுக்கு என்னுடைய மனமார்ந்த நன்றிகள்.

மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்படுமா என்றக் கேள்விக்கு, அப்படி நடப்பதற்கு வாய்ப்பில்லை. அரசாங்கம் அறிவித்துள்ள கட்டுப்பாடுகளை, மக்கள் கடைபிடித்தால், நோய் பரவல் குறைந்துவிடும். ஊரடங்கும் தேவைப்படாது. பொதுமக்களுடைய முழு ஒத்துழைப்பு மிகவும் முக்கியம். இந்த நோய் பரவலைத் தடுப்பதற்காக, முழு அர்பணிப்பு உணர்வோடு பணிபுரியும் அனைத்து ஊழியர்களுக்கும், தம்முடைய மனமார்ந்த பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்வதாக, அவர் தெரிவித்துள்ளார்.

HOT NEWS