தமிழகத்தில் வரதட்சணைக் கொடுமைக்கான தண்டனையானது ஏழு ஆண்டுகளில் இருந்து 10 ஆண்டுகளாக அதிகரிக்கப் பரிந்துரை செய்யப்படும் என, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்து உள்ளார்.
தமிழகத்தில் தற்பொழுது சட்டசபைக் கூட்டமானது, நடைபெற்று வருகின்றது. இந்தக் கூட்டத்தில் இன்று பேசிய எடப்பாடி பழனிசாமி, விதி எண் 110ன் கீழ் புதிய அறிவிப்புகளை வெளியிட்டார். அதில், வரதட்சணைக் கொடுமைக்கான தண்டனையானது, ஏழு ஆண்டுகளில் இருந்து 10 ஆண்டுகளாக உயர்த்தப்பட வேண்டும் என்று, தமிழக அரசு பரிந்துரை செய்யும் எனக் கூறியுள்ளார்.
மேலும் அவர் பேசுகையில், பெண்களுக்கு எதிரான நடைபெறும் குற்றங்களுக்கான தண்டனைகள் அதிகரிக்கப்பட வேண்டும் எனவும், பாலியல் தொழிலிற்காக பெண்களை வாங்குவது மற்றும் விற்பதற்கு, அதிகபட்சமாக ஆயுள்தண்டனை விதிக்க வேண்டும் என, தமிழக அரசு மத்திய அரசிற்கு பரிந்துரை செய்யும் எனவும், பெண்களைப் பின் தொடர்ந்து தொல்லை தந்தால் 5 ஆண்டு தண்டனையானது, ஏழு ஆண்டு தண்டனையாக உயர்த்த பரிந்துரை செய்யப்படும் எனவும் கூறியுள்ளார்.