தமிழக அரசுக்கு கடன் கொடுப்பதை குறைக்கும், புதிய முடிவினை ரிசர்வ் வங்கி திரும்பப் பெற வேண்டும் என, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்து உள்ளார்.
சமீபத்தில், மாநிலங்களுக்கு கடன் வழங்குவதில், ரிசர்வ் வங்கியானது புதிய திருத்தங்களைக் கொண்டு வந்தது. இதனால், தமிழகத்திற்குக் கிடைக்கின்ற கடனின் அளவானது, அதிகளவில் குறைக்கப்பட்டது. இது குறித்து, பிரதமர் மோடிக்கு, பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார். அதில், புதிய திருத்தங்கள் வருவதற்கு முன்பே, தமிழகத்தில் உள்ள 32 மாவட்டங்கள் கடன் பெறத் தகுதியானவையாக இருந்து வந்தன.
தற்பொழுது கொண்டு வரப்பட்டுள்ள திருத்தங்களால், கடனை பெற்றவர்கள் அதனை திருப்பிச் செலுத்தி வருகின்ற காலத்தில், அதற்கு அபராதம் விதிப்பது கூடாது எனவும், அவர்களை ஊக்கப்படுத்தும் விதமாகவே திருத்தங்கள் இருக்க வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார். இது டொர்பாக, தன்னுடையக் கடிதத்தினையும் அவர் பிரதமருக்கு அனுப்பியுள்ளார்.