கடுமையான மழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு உள்ள, தெலுங்கானா மாநிலத்திற்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி 10 கோடி ரூபாயினை உதவித் தொகையாக வழங்கியுள்ளார்.
தற்பொழுது வட இந்தியாவில் கடுமையான பருவ மழை பெய்து வருகின்றது. அங்கு பெய்கின்ற மழையின் தொடர்ச்சியாக, தென் இந்தியாவின் தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களிலும் தொடர் மழையானது, கொட்டித் தீர்த்து வருகின்றது. இதனால், அங்கு இயல்பு வாழ்க்கையானது முற்றிலும் முடங்கி உள்ளது. தெருக்கள் மற்றும் சாலைகளில் மழை நீரானது, வெள்ளமாக ஓடுகின்றது.
இதனால், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தற்பொழுது தெலுங்கானா முதல்வருக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில், கடும் மழையால் பாதிக்கப்பட்டு உள்ள தெலுங்கானா மக்களுக்கு என்னுடைய ஆறுதல்கள். அங்கு நிலைமை சீராக வேண்டிக் கொள்கின்றேன். பாதிக்கப்பட்ட மக்களுக்காக தமிழக அரசு சார்பிலும், தமிழக மக்களின் சார்பிலும் 10 கோடி ரூபாயினை, உதவித் தொகையாக வழங்குவதாக அறிவித்து உள்ளார்.
மேலும், இந்த மழையால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தாருக்கு, தங்களுடைய ஆழ்ந்த அனுதாபத்தினைத் தெரிவித்துக் கொள்வதாகவும் அவர் தெரிவித்து உள்ளார். அவருடைய உதவிக்கு, தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் தன்னுடைய நன்றியினைத் தெரிவித்து உள்ளார்.