தமிழ்நாடு மின்வாரியம் ஒரு போதும் தனியார் மயம் ஆக்கப்படாது என, தமிழக மின்வாரியத்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்து உள்ளார்.
தமிழ்நாட்டில் தற்பொழுது ஒயர் மேன் பணிகளுக்காக, தமிழக அரசு பணியாட்களை நியமித்து வந்தது. இனி, அவ்வாறு இல்லாமல், ஒப்பந்த ஊழியர்களை நியமிக்க முடிவு செய்துள்ளது. அதனடிப்படையில், தற்பொழுது 10,000க்கும் அதிகமான கேங்மேன் எனப்படும் பணிகள் உட்பட்டவைகளை அவுட்சோர்சிங் செய்ய முடிவு செய்துள்ளது.
இதனால், மின் வாரியத்தின் செலவுகள் குறையும் எனவும், வேலைகளும் துரிதக் கதியில் நடக்கும் எனவும் நம்பப்படுகின்றது. அதன்படி நியமிக்கப்படும் ஊழியர்களுக்கு ஒரு நாளைக்கு 412 ரூபாயானது, சம்பளமாக வழங்கப்படும் எனவும் கூறப்பட்டு உள்ளது. இதனால், இனி அரசு ஐடிஐ நிறுவனங்களில் படித்தவர்களுக்கு வேலைக் கிடைப்பதில் சிக்கல்கள் ஏற்பட்டு உள்ளது. இது குறித்து, மின்வாரியத்துறை அமைச்சர் தங்கமணி பேசியுள்ளார்.
நாமக்கல்லில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர், மின்வாரியமானது ஒரு பொழுதும் தனியார்மயம் ஆக்கப்படாது எனவும், 50 விழுக்காட்டிற்கும் மேல் காலிப் பணியிடங்கள் உள்ளதால் மட்டுமே, இத்தகைய முடிவினை எடுத்து உள்ளதாகவும், இதனால், 24 மணி நேரமும் எவ்விதத் தடையுமின்றி மின் உதவியினைப் பெற இயலும் எனவும் கூறியுள்ளார்.