தமிழகத்தில் அடுத்த ஆண்டு தேர்தல் ஆரம்பிப்பதற்குள், அனைத்து தேர்வுகளையும் வைத்து முடிக்க, முடிவு செய்யப்பட்டு உள்ளது.
தற்பொழுது கொரோனா வைரஸ் காரணமாக, ஊரடங்கு உத்தரவானது அமலில் உள்ளது. இதனால், பொதுமக்கள் வெளியில் நடமாடத் தடை விதிக்கப்பட்டு உள்ளது. இந்த சூழ்நிலையில், வருகின்ற 2021ம் ஆண்டு ஏப்ரல் மற்றும் மே மாதங்களில், தமிழக சட்டப்பேரவைத் தேர்தலானது நடைபெற உள்ளது. இந்தத் தேர்தலில், கட்டாயம் வெற்றி பெற வேண்டும் என, தமிழகக் கட்சிகள் இப்பொழுதே தீவிரமாக வேலை செய்து வருகின்றன. இந்த சூழ்நிலையில், அந்த மாதங்களில் தேர்வுகளை வைக்காமல் அதற்கு முன் கூட்டியேத் தேர்வுகளை வைக்க ஆலோசனை நடத்தப்பட்டு உள்ளது.
பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில், அனைத்து பள்ளி மற்றும் கல்லூரித் தேர்வுகளையும் வைத்து முடிக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. இதன் மூலம், பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் காலியாக இருக்கும் எனவும், தேர்தல் பணியில் ஆசிரியர்கள் எவ்வித சிரமமும் இன்றி ஈடுபட முடியும் எனவும் கூறப்பட்டு உள்ளது.