இறுதி தேர்வுகளை நடத்த அனுமதி! தமிழக அரசு அரசாணையினை வெளியிட்டது!

16 September 2020 அரசியல்
eps.jpg

தமிழகத்தில் உள்ளப் பல்கலைக் கழகங்கள் அனைத்தும், இறுதி செமஸ்டர் தேர்வுகளை நடத்திக் கொள்ளலாம் என, தமிழக அரசு அரசாணை வெளியிட்டு உள்ளது.

இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் காரணமாக, ஊரடங்கானது அமலில் உள்ளது. இதனால், பள்ளிப் பொதுத் தேர்வுகள் மற்றும் கல்லூரிகளின் செமஸ்டர் தேர்வுகள் முதலியவை நடைபெறாமல் உள்ளன. இது குறித்து அறிக்கை வெளியிட்ட பல்கலைக் கழக மானியக் குழு, வருகின்ற செப்டம்பர் 30ம் தேதிக்குள் பல்கலைக் கழகத் தேர்வுகளை வைத்து முடிக்க வேண்டும் என அறிவுறுத்தியது. இதனைத் தொடர்ந்து, தமிழகத்தில் உயர்கல்வித்துறை அமைச்சர் கேபி அன்பழகன் தலைமையில், உயரதிகாரிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தினைத் தொடர்ந்து, இறுதி செமஸ்டர் தேர்வுகளை மட்டும் தற்பொழுது வைக்கலாம் எனவும், பிறத் தேர்வுகளை எல்லாம் ரத்து செய்து மாணவர்களை தேர்ச்சி என அறிவிக்கலாம் எனவும் கூறப்பட்டது. அத்துடன், அரியர் மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி எனவும் அறிவித்தனர். இது இந்திய அளவில் பரபரப்பினை ஏற்படுத்தியது. இந்த சூழ்நிலையில், தற்பொழுது தமிழக அரசு இறுதி செமஸ்டர் தேர்வுகளை நடத்த அனுமதி வழங்கி உள்ளது.

இதற்கான அதிகாரப்பூர்வ அரசாணையினையும் வெளியிட்டு உள்ளது. அதன்படி, அண்ணா பல்கலைக் கழகத்தின் தேர்வுகள் இணைய வாயிலாக செப்டம்பர் 22ம் தேதி முதல் 29ம் தேதி வரையிலும், காமராஜர் பல்கலைக் கழகத்தின் தேர்வுகள் செப்டம்பர் 17 முதல் 30ம் தேதி வரையிலும், சென்னை பல்கலைக் கழகத்தின் தேர்வுகள் செப்டம்பர் 21ம் தேதி முதல் செப்டம்பர் 25ம் தேதி வரையிலும், பாரதிதாசன் பல்கலைக் கழகத் தேர்வுகள் செப்டம்பர் 21ம் தேதி முதல் செப்டம்பர் 25ம் தேதி வரையிலும், பாரதியார் பல்கலைக் கழகத்தின் தேர்வுகள் செப்டம்பர் 21ம் தேதி முதல் அக்டோபர் 7ம் தேதி வரையிலும் நடைபெற உள்ளன.

HOT NEWS