தமிழகத்தில் உணவுப் பொருட்களை அடைத்து விற்கும் பாக்கெட்டிற்கு தடை!

10 June 2020 அரசியல்
plasticbags.jpg

கடைகளில் உணவுப் பொருட்களை அடைத்து, விற்கும் பாக்கெட்டிற்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.

கடந்த 2018ம் ஆண்டு முதல், பிளாஸ்டிக் விற்பனைக்கு தமிழக அரசு தடை விதித்தது. ஒருமுறைப் பயன்படுத்தி தூக்கி வீசும் பிளாஸ்டிக்கால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதாகவும், எனவே அவைகளைத் தடை செய்வதாகவும் அரசு கூறியது. இதனைத் தொடர்ந்து, பிளாஸ்டிக் கவர்கள், பொருட்கள் தடை செய்யப்பட்டன.

மொத்தமாக 14 வகையான, பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. இருப்பினும், தொடர்ந்து பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை ஜோராக நடைபெற்று வருகின்றது. இந்த சூழ்நிலையில், உணவுப் பொருட்களை பிளாஸ்டிக் பைகளில் அடைத்து விற்கப்படுவதால், சுற்றுச்சூழல் கடுமையாகப் பாதிக்கப்படுகின்றது என, சுற்றுச்சூழல் வாரியத் தலைவர் தமிழக அரசுக்கு கடிதம் எழுதினார். இதனைத் தொடர்ந்து, தமிழக அரசு புதிய அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டுள்ளது.

அதன்படி, உணவுப் பொருட்களை அடைத்து விற்கப் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு, தற்பொழுது தடை விதிக்கப்பட்டு உள்ளது. மேலும், அதனை தயாரிக்கவோ அல்லது பயன்படுத்தவோக் கூடாது எனவும் கடுமையாகக் கூறியுள்ளது. மீறினால், கடுமையான அபராதம் விதிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது.

HOT NEWS