தமிழ் திரைப்படத் துறையினருக்கு, தமிழக அரசு சார்பில் நிதியுதவி உட்பட பல உதவிகள் செய்யப்பட்டதாக, அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் பேசுகையில், திரைப்படத் துறையினர் நலவாரியத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள 39 சங்கங்களைச் சார்ந்த உறுப்பினர்கள் சிரமமின்றி வாழ்வதற்கு, தமிழ்நாடு அரசு இரண்டு கோடியே 16 லட்சத்து 79 ஆயிரம் வழங்கப்பட உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
அதன்படி பதிவு செய்த 21679 உறுப்பினர்களில், 7489 பேருக்கு தலா 1000 வழங்கப்பட்டு உள்ளது. கொரோனா நிதியுதவி பெறாதவர்கள், தங்களுடைய சங்கத்தின் மூலமோ அல்லது திரைப்படத்துறையினர் நலவாரியம் மூலமாகவோ கொரோனா நிதியினைப் பெறுமாறு கூறியுள்ளார்.
அல்லது, cinewelfare@gmail.com என்ற மின்அஞ்சலுக்கு, தங்களுடைய நலவாரிய உறுப்பினர் பதிவு எண், வங்கிக் கிளை, வங்கியின் பெயர், கணக்கு எண், IFSC குறியீடு எண் மற்றும் MICR குறீயுடு உள்ளிட்டவைகளை அனுப்பி வைக்க வேண்டும் எனவும், கூறப்பட்டு உள்ளது.