ஊர் பெயர்களை தமிழில் உச்சரிக்க நடவடிக்கை! தூத்துக்குரின் இனி தூத்துக்குடி!

11 June 2020 அரசியல்
epscm.jpg

தமிழ் வளர்ச்சி 2018-2019ம் ஆண்டிற்கான மானியக் கோரிக்கை அறிவிப்புகள், தமிழ்நாட்டிலுள்ள ஊரின் பெயர்களை தமிழ் உச்சரிப்பைப் போன்றே ஆங்கிலத்திலும் அமைத்து செயல்படுத்துவது பற்றிய புதிய அரசாணை ஒன்றினை, தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

அதன்படி, இனி ஆங்கிலம் மற்றும் பிற மொழி உச்சரிப்புகளைக் கொண்ட ஊர்களின் பெயர்கள் அனைத்தும், இனி தமிழ் மொழியின் உச்சரிப்புகளைக் கொண்டதாக மாற்றமடைய உள்ளது. தூத்துக்குரின் என்று ஆங்கிலத்தில் உச்சரிக்கப்பட்டு வந்தது மாற்றப்பட்டு தூத்துக்குடி என அழைக்கப்பட உள்ளது.

மொத்தம் 1018 ஊர்களின் பெயர்கள் இவ்வாறு மாற்றப்படுகின்றன. சென்னையில் உள்ளப் பலப் பகுதிகளின் பெயர்கள் அந்த வகையில் மாற்றமடைய உள்ளன. எக்மோர் என அழைக்கப்பட்ட பகுதியானது, இனி ஆங்கிலத்திலும் எழும்பூர் என அழைக்கப்படும். தண்டையார்பேட் என்றப் பகுதியானது தண்டையார்பேட்டை என ஆங்கிலத்திலும் அழைக்கப்பட உள்ளது.

HOT NEWS