வட்டியினை வசூலிக்கத் தடை! தமிழக அரசு அதிரடி!

27 March 2020 அரசியல்
edappadipalaniswami.jpg

இந்தியா முழுவதும் ஏப்ரல் 14ம் தேதி வரை, ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இதனால், யாரும் வேலைக்குச் செல்ல இயலாத சூழ்நிலை ஏற்பட்டு உள்ளது. தமிழகத்தில் மார்ச் 31 வரை இருந்த ஊரடங்கு உத்தரவானது, வருகின்ற ஏப்ரல் 14ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதனால், பலரும் தங்களுடையக் கடன்களை அடைக்க முடியாத சூழ்நிலை உருவாகியுள்ளது. இந்நிலையில், தமிழக முதல்வர் எடப்பாடி தலைமையில் அரசு அதிகாரிகள் கூட்டம் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில், முக்கிய முடிவுகளும் அறிவிப்புகளும் வெளியிடப்பட்டன.

தனியார் வங்கிகள், சிறிய நிதி நிறுவனங்கள் சுய உதவி குழுக்கள் ஆகியவை தினசரி/வராந்திர/ மாதவட்டி மற்றும் அசலை வசூல் செய்கின்றன. தற்போது ஊரடங்கு உத்தரவினால் யாரும் வேலைக்கு செல்ல இயலாததால், இது போன்ற பணவசூலை உடனடியாக மறு உத்தரவு வரும் வரை நிறுத்தி வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

HOT NEWS