கல்லூரி படிப்புகளுக்கு நுழைவுத் தேர்வுகளை அனுமதிக்க முடியாது என, தமிழக அரசு திட்டவட்டமாக அறிவித்து உள்ளது.
தற்பொழுது புதியக் கல்விக் கொள்கையினை அமல்படுத்துவதில், மத்திய அரசு தீவிரமாக செயல்பட்டு வருகின்றது. இதற்கு தமிழகம் உட்பட, பல மாநிலங்கள் தங்களுடைய எதிர்ப்பினை தெரிவித்து உள்ளனர். இந்த சூழ்நிலையில், மாநிலங்களின் கருத்துக்கள் கேட்கப்படுவதாக, மத்திய அரசு அறிவித்தது. அதனைத் தொடர்ந்து, தமிழக அரசு உயர்கல்வித் துறையின் கீழ், குழு ஒன்றினை அமைத்தது.
அதற்கு உயர்கல்வித்துறை செயலாளர் அபூர்வா தலைமை தாங்கினார். அவர் தலைமையில், பலகட்ட ஆய்வுகளும், கருத்துக்களும் சோதனை செய்யப்பட்டன. அதனடிப்படையில், மத்திய அரசுக்கு தமிழக அரசு புதிய அறிக்கை ஒன்றினை அனுப்பி உள்ளது. அதில், எக்காரணம் கொண்டும், உயர்கல்விக்கு நுழைவுத் தேர்வினை ஏற்க முடியாது என்றுக் கூறியுள்ளது.