உங்கள் கரண்ட் பில் அதிகமா? தமிழகம் முழுவதும் புதிய சர்ச்சை!

04 June 2020 அரசியல்
tneblogo.jpg

தமிழகத்தில் உள்ள அனைவருக்கும் இந்த மாதம், கரெண்ட் பில் கட்டுவதில் பெரிய பிரச்சனையே எழுந்துள்ளது.

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் காரணமாக வருகின்ற ஜூன் 30ம் தேதி வரை, ஊரடங்கு உத்தரவானது நீட்டிக்கப்பட்டு உள்ளது. இதனால், பொதுசேவைகள் பெருமளவில் முடங்கி உள்ளன. இந்நிலையில், தமிழகத்தில் கரண்ட் ரீடிங் எடுக்க பெரும்பாலான ஏரியாக்களில் ஊழியர்கள் வரவில்லை.

இந்நிலையில் கரண்ட் பில் கட்டியவர்களுக்கு மாபெரும் அதிர்ச்சிக் காத்திருந்தது. அனைவருக்கும் பயன்பாட்டிற்கு அதிகமாகாவே கட்டணம் விதிக்கப்பட்டு உள்ளது. அனைவருமே, தமிழ்நாடு மின்சார வாரியம் ஊழல் செய்கின்றது எனப் புகார் கூறினர். நடிகர் பிரசன்னாவும் இது குறித்து, தன்னுடையப் புகாரினைத் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் சமூக வலைதளங்களில் பலரும் தங்களுடையக் கருத்துக்களை கோபமாகப் பதிவிட்டு வருகின்றனர். உங்களுடைய கரண்ட் பில்லை கணக்கீடு செய்வதற்கு புதிய வசதியினை, தற்பொழுது தமிழக மின்சார வாரியம் அறிமுகம் செய்துள்ளது. இதன் மூலம், நீங்கள் உங்கள் மின் கட்டணத்தினை தெளிவாகக் கணக்கிட இயலும்.

www.tnebnet.org/awp/tariffMaster;jsessionid=4T793RaIBDK+oxTO6dryJAVr?execution=e1s1

HOT NEWS