டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேடுகளுக்கு எதிராக புதிய செயலி! டிஎன்பிஎஸ்சி அதிரடி!

28 May 2020 அரசியல்
tnpsc.jpg

டிஎன்பிஎஸ்சி தேர்வுகளில் நடைபெறும் முறைகேடுகளைப் பற்றி, உடனுக்குடன் தெரிவிக்க, புதிய செயலியினை உருவாக்கும் முயற்சியில் டிஎன்பிஎஸ்சி ஈடுபட்டு உள்ளது.

தமிழகத்தில் உள்ள அரசாங்கப் பணிகளுக்கு, டிஎன்பிஎஸ்சி சார்பில் தேர்வுகள் வைக்கப்பட்டு பணியாளர்கள் நியமிக்கப்படுகின்றனர். இந்நிலையில், கடந்த ஆண்டு இதில் முறைகேடுகள் நடைபெற்று இருந்தது கண்டறியப்பட்டது. இதனைத் தொடர்ந்து, பல விதிமுறைகளில் மாற்றங்களைக் கொண்டு வந்து உள்ளது டிஎன்பிஎஸ்சி.

இந்நிலையில், புதிதாக ஒரு திட்டம் ஒன்றினையும் தீட்டியுள்ளது. அதன்படி, டிஎன்பிஎஸ்சி தேர்வில் முறைகேடுகள் நடப்பதைத் தெரிவிக்க, தேர்வு எழுதுபவர்களுக்காக புதிய செயலி ஒன்றினை வடிவமைக்கும் டென்டரை வெளியிட்டுள்ளது. அதன்படி, இனித் தேர்வு எழுதுபவர்கள், தங்களுடைய செல்போனில் உள்ள செயலி மூலம், தேர்வில் நடைபெறும் முறைகேடுகள் குறித்து டிஎன்பிஎஸ்சி நிர்வாகத்திற்கு நேரடியாக, தகவல்களை அறிவிக்கலாம்.

அதற்கேற்றாற் போல, அந்த செயலியினை அனைத்து ஸ்மார்ட்போன்களிலும் பயன்படுத்தும் விதத்தில் உருவாக்க, டென்டர் அறிவிக்கப்பட்டு உள்ளது. இதற்குரிய நெறிமுறைகள், கட்டுப்பாடுகள் மற்றும் புள்ளிவிவரங்களையும் தன்னுடைய அதிகாரப்பூர்வ வலைதளமான டிஎன்பிஎஸ்சி வலைதளத்தில் வெளியிட்டுள்ளது.

HOT NEWS