டிஎன்பிஎஸ்சி அதிரடி! குரூப்-2 தேர்வில் மொழிப் பாடம் இல்லை!

27 September 2019 அரசியல்
tnpsc.jpg

இந்த ஆண்டு, டிஎன்பிஎஸ்சிக்கும் என்ன ஆனது என்றுத் தெரியவில்லை. பலப் பிரச்சனைகள், பல வழக்குகளைக் கடந்து, தற்பொழுது புதிய அணுகுண்டினைத் தூக்கி, மாணவர்களின் தலையில் போட்டுள்ளது.

தற்பொழுது டிஎன்பிஎஸ்சி குரூப்-2 தேர்விற்கான சிலபஸ் வெளியாகி உள்ளது. அதில், மொழிப் பாடம் இல்லாததால், மாணவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளது.

எப்பொழுதும், 100 மதிப்பெண்களுக்கு, மொழிப் பாடங்களில் இருந்தும், மீதி 100 மதிப்பெண்களை மற்ற விஷயங்களான, அரசியல், வரலாறு, பொது அறிவு, அறிவியல் உட்பட பலப் பிரிவுகளில் இருந்து கேள்வியாக வரும்.

இந்த முறை ப்ரிலிமினரியில், மொழிப் பாடங்களுக்குத் தர வேண்டிய 100 மதிப்பெண்களும் ரத்து செய்யப்பட்டு, அதற்குப் பதிலாக, 200 மதிப்பெண்களுக்கும், பொது அறிவியல், நடப்பு நிகழ்வுகள், இந்தியாவின் புவியியல், இந்தியாவின் வரலாறும் பண்பாடும், இந்திய ஆட்சியியல், இந்தியப் பொருளாதாரம், தமிழ்நாட்டின் வரலாறு, மரபு, பண்பாடு, மற்றும் சமூக அரசியல் மற்றும் இயக்கங்கள், தமிழகத்தில் வளர்ச்சி நிர்வாகம், ஆப்டிடியூட் எனப்படும் திறனறிவும்-மனக் கணக்கு நுண்ணறிவும் கேட்க்கப்பட உள்ளது.

அதே போல் மெயின் தேர்வில் கேட்கப்பட விஷயங்களும் அப்டேட் செய்யப்பட்டுள்ளன. இதனால், இது நாள் வரை, குரூப் 2 தேர்விற்காக, மொழிப் பாடங்களுக்கு கடுமையாக உழைத்துப் படித்து வந்தவர்களின், உழைப்பு கேள்விக் குறியாகி உள்ளது. மேலும், குரூப் 2 தேர்விலேயே மொழிப் பாடம் இல்லாத நிலையில், குரூப் 1 தேர்வில் மொழிப் பாடத்திற்கு முக்கியத்துவம் அளிக்கப்படுமா என்பது கேள்விக்குறியாக உள்ளது.

TNPSC GROUP 2 SYLLABUS TAMIL

HOT NEWS