டிஎன்பிஎஸ்சி கேள்விகளில் குளறுபடி! கருணை மதிப்பெண் கிடைக்குமா?

02 September 2019 அரசியல்
tnpsc2.jpg

நேற்று சுமார் 17 லட்சம் பேர் பங்குபெற்ற டிஎன்பிஎஸ்சி குரூப்4 தேர்வு நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட தேர்வர்கள் உற்சாகமாகத் தேர்வு எழுதினர். இதில் எப்படியாவது வேலைக்குச் சென்று விட வேண்டும் என்கிற எண்ணத்தில், பலரும் தேர்வு எழுதினர்.

இந்த முறைக் கேள்வித்தாள் குரூப்-2 தரத்தில் உருவாக்கப்பட்டு இருந்ததாக தேர்வு எழுதியவர்கள் கூறினர். மேலும், அவர்கள் கூறுகையில், கேள்வித்தாளில் ஒரு சில கேள்விகள் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மொழிமாற்றம் செய்து அச்சிடுவதில் பிழை உள்ளது. அதற்கு கருணை மதிப்பெண் வழங்க வேண்டும் எனவும், கோரிக்கை விடுத்துள்ளனர்.

tnpsc2.jpg

மேலும், கணக்குப் பாடத்தில் இருந்து சற்றுக் கடினமான கேள்விகள் கேட்கப்பட்டு இருந்ததாகவும் கூறினர். இருப்பினும், கேள்வித்தாள் மிக எளிதாகவே இருந்ததாக கருத்து தெரிவித்துள்ளனர்.

தொடர்ந்து, வேலைவாய்ப்பின்மை மற்றும் தொழில்துறையில் நிலவி வரும் மந்த நிலைக் காரணமாக, அரசாங்க வேலையை நோக்கிப் படையெடுக்கத் தொடங்கி உள்ளனர் பொதுமக்கள். அதன் அத்தாட்சியே இந்த டிஎன்பிஎஸ்சி குரூப் தேர்வில் 17 லட்சம் பேர் தேர்வு எழுதிய நிகழ்வு. வெறும் 6000 இடங்களுக்கு 17 லட்சம் பேர் தேர்வு எழுதியது, தமிழகத் தேர்வு வரலாற்றில் இதுவே முதல் முறை.

HOT NEWS