டிஎன்பிஎஸ்சி முறைகேடு! அதிகாரிகள் கடுமையான விசாரணை!

16 January 2020 அரசியல்
tnpsc.jpg

டிஎன்பிஎஸ்சி தேர்வில் முறைகேடு புகார் சுமத்தப்பட்ட 35 பேரிடம், டிஎன்பிஎஸ்சி அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

டிஎன்பிஎஸ்சி குரூப் 2 மற்றும் குரூப் 4 தேர்வுகளை நடத்தியது. அதில், குரூப் 4 தேர்வினை 12 லட்சத்து 76 ஆயிரத்து 108 பேர் தேர்வு எழுதினர். இந்த தேர்வின் முடிவுகள் வெளியானது. அதன் பின்னர், தர வரிசைப் பட்டியலும் வெளியிடப்பட்டது.

அதில், இராமேஷ்வரம் பகுதியில் உள்ள தனியார் டிஎன்பிஎஸ்சி பயிற்சி மையத்தில் பயின்ற 35 பேர், முதல் நூறு இடங்களுக்குள் தேர்ச்சி பெற்று இடம் பிடித்தனர். இதனால், பெரிய அளவில் சர்ச்சை வெடித்தது. மேலும், அந்த பயிற்சி மையத்தில் படித்தப் பலரும் நல்ல ரேங்கினை எடுத்ததால், சந்தேகம் எழுப்பப்பட்டது.

இதனையடுத்து, டிஎன்பிஎஸ்சி தரப்பில், எவ்வித முறைகேடும் நடக்கவில்லை என்ற அறிக்கை வெளியானது. இருப்பினும், சந்தேகம் எழுப்பப்பட்டதால், விசாரணை நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டது. முறைகேட்டில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்பட்ட 35 பேரும், சென்னையில் உள்ள டிஎன்பிஎஸ்சி கீழக்கரை மையத்திற்கு அழைக்கப்பட்டனர்.

அவர்களிடம் ஒவ்வொருவராக, அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அதில், ஒரு சிலர் முன்னுக்குப் பின் முரணான தகவல்கள் அளித்துள்ளனர். மற்றவர்கள், தங்களுடைய விரிவான விளக்கத்தினை அளித்தனர். அவர்களிடம், மீண்டும் தேர்வு வைத்தால் எழுதத் தயாரா? என்ற கேள்வியும் கேட்கப்பட்டது.

இருப்பினும், அந்த விசாரணையில் என்னென்ன நடத்தப்பட்டது, எப்படி நடத்தப்பட்டது என்பது பற்றியத் தகவல்கள் வெளியாகவில்லை. இதில், ஊழல் நடைபெற்று இருந்தால், பெரிய அளவில் விசாரணை நடைபெற வாய்ப்புகள் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

HOT NEWS