தேர்வுகள் திட்டமிட்டபடி நடைபெறும்! டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

11 May 2020 அரசியல்
tnpscoffice.jpg

ஏற்கனவே அறிவித்தப்படி, டிஎன்பிஎஸ்சி தேர்வுகள் நடைபெறும் என, டிஎன்பிஎஸ்சி அமைப்பு தெரிவித்துள்ளது.

இந்தியா முழுவதும், கொரோனா வைரஸானது வேகமாகப் பரவ ஆரம்பித்துள்ளது. வருகின்ற மே-17ம் தேதி வரை, இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவானது நீட்டிக்கப்பட்டு உள்ளது. இதனிடையே, அரசாங்கப் பணிகளுக்காக தேர்வுகள் நடத்தப்படாமல் உள்ளன.

இவைகளை தமிழகத்திற்காக நடத்தி வருகின்ற டிஎன்பிஎஸ்சி அமைப்பானது, தற்பொழுது அறிக்கை ஒன்றினை வெளியிட்டு உள்ளது. அதன்படி இந்த ஆண்டு நடைபெற உள்ளதாக திட்டமிடப்பட்டு இருந்த, குரூப் 1 முதல் குரூப் 4 வரையிலான, அனைத்துத் தேர்வுகளும் எவ்வித மாற்றமும் இன்றி நடைபெறும் என, டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.

அரசாங்க ஊழியர்களின் ஓய்வு பெறும் அறிவிப்பினை, தமிழக அரசு 59 ஆக அதிகரித்துள்ள நிலையில், இந்த ஆண்டு டிஎன்பிஎஸ்சி தேர்வுகள் நடைபெறாது என்றத் தகவல்கள் பரவ ஆரம்பித்த நிலையில், அவைகளுக்கு முற்றுப் புள்ளி வைக்கும் விதமாக டிஎன்பிஎஸ்சி இந்த அறிவிப்பினை வெளியிட்டு உள்ளது.

ஏற்கனவே, டிஎன்பிஎஸ்சி ஊழல் புகாரில், ஜெயக்குமார் உள்ளிட்டப் பலர் சிறையில் உள்ளனர். அவர்களிடம் சிபிசிஐடி போலீசார் விசாரித்து வருகின்றனர். இதுபோன்ற சம்பவம் மீண்டும் நடைபெறக் கூடாது என, அரசாங்கத் தேர்விற்குப் படித்து வருகின்றவர்கள் தெரிவித்து உள்ளனர்.

HOT NEWS