பாஜக ஆரம்பித்து 40 ஆண்டுகள் ஆனது! மோடி வாழ்த்து!

06 April 2020 அரசியல்
narendramodi40.jpg

இன்றுடன் மத்தியில் ஆளும் பாஜக கட்சி ஆரம்பிக்கப்பட்டு 40 ஆண்டுகள் ஆனதை ஒட்டி, பிரதமர் மோடி அக்கட்சியினருக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.

1980ம் ஆண்டு ஏப்ரல் 6ம் தேதி அன்று, அட்டல் பிகாரி வாஜ்பாய், பைரோன் சிங் சேகாவத், லால் கிருஷ்ணா அத்வானி உள்ளிட்டோரால் சிறிய அளவில் ஆரம்பிக்கப்பட்டதுப்பட்டது பாரதிய ஜனதா கட்சி. கட்சியின் மீது மக்களுக்கு ஏற்பட்ட ஈர்ப்பு, இந்துத்துவா கொள்கை, தலைவர்களின் செயல்பாடுகளால் மிகக் குறுகியக் காலக்கட்டத்தில் நல்ல வளர்ச்சியினைக் இக்கட்சி பெற்றது.

தற்பொழுது மொத்த இந்தியாவினையும் கைப்பற்றி, மாபெரும் வளர்ச்சியினை வெறும் நாற்பது ஆண்டுகளுக்குள் பெற்றுள்ளது. இது குறித்து, பல பாஜக தலைவர்களும் தங்களுடைய வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்து வருகின்றனர். அமித் ஷா, நரேந்திர மோடி, ஸ்மிருதி இராணி, பாஜக தலைவர் ஜேபி நட்டா உள்ளிட்டோர் தங்களுடைய வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.

மேலும், இந்த நாளில் இலவச உணவு உள்ளிட்ட பல சமூக சேவைகளைச் செய்யவும் கூறியுள்ளனர்.

HOT NEWS