உலகிலேயே முதன் முதலாக, விண்வெளிக்கேச் சென்று திரைப்படம் உருவாக்கப்பட உள்ளது.
உலகளவில் பல்வேறு, திரைப்படங்கள் விண்வெளி சார்ந்து உருவாக்கப்பட்டு இருக்கின்றன. அப்படிப்பட்ட படங்கள் அனைத்தும், கிராபிக்ஸ் தொழில்நுட்பம் மற்றும் செட்டுகளைப் பயன்படுத்தி எடுக்கப்பட்டவை. இந்நிலையில், தற்பொழுது விண்வெளிக்கே சூட்டிங்கிற்காக செல்ல உள்ளது ஹாலிவுட்.
ஹாலிவுட் நடிகர் டாம் க்ரூசினைத் தெரியாதவர்கள் உலகிலேயே இல்லை என்றுக் கூறலாம். அந்த அளவிற்கு, அவர் மிகவும் பெரிய நடிகர். 57 வயதான அவர், பல்வேறு திரைப்படங்களில் நடித்து உள்ளார். அவருக்கென, உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர்.
அவர் தற்பொழுது நாசா மற்றும் எலன் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்துடன் இணைந்து, டாம் க்ரூஸ் இந்தப் படத்தினை உருவாக்க உள்ளார் என செய்திகள் வெளியாகி உள்ளன. இதனை நாசா அமைப்பும் உறுதி செய்துள்ளது. இதனால், டாம் க்ரூஸ் ரசிகர்கள் மிகுந்த குஷியில் உள்ளனர். இந்தப் படம், கூறியுள்ளபடி எடுக்கப்பட்டால், வரலாற்று சாதனையாக இருக்கும் என்பதில், மாற்றுக் கருத்தே இல்லை.