தக்காளி மிக விலை மலிவான மற்றும் அனைத்து இடங்களிலும் கிடைக்கக் கூடிய, ஒரு உணவுப் பொருள் ஆகும். இதில் இயற்கையாகவே, அதிகளவில் லைகோப்பீன் உள்ளது. இதில் ஆன்டி ஆக்ஸிடென்ட் எனும், ஒரு வித வேதிப் பொருள் உள்ளது. இது நம்முடைய தோலில் ஏற்படும் சுருக்கத்தைக் குறைக்க முக்கியக் காரணமாக உள்ளது. கங்கை நதியில் மட்டுமே, இயற்கையாக அதிகளவில் ஆன்டி ஆக்ஸிடென்ட் உள்ளது. இது மிக தூய்மையாக நீரை வைத்துக் கொள்ள உதவுகிறது. இதை தெரிந்து கொண்ட பல நிறுவனங்கள் ஆன்டி ஆக்ஸிடென்ட்டை உடைய மேக்கப் பொருட்களை தாயரிக்கின்றன. சரி விஷயத்திற்கு வருவோம். தக்காளியை அதிகளவில் உணவில் சேர்த்துக் கொண்டால், அது உடலில் உள்ள வெப்பத்தை அதிகரித்துவிடும்.
எனவே, இதனை சுத்தமான நீரில் கழுவிய பின் பச்சையாகவே உண்ணலாம். மேலும், இதன் சாற்றில், சீனி அல்லுது சர்க்கரைச் சேர்த்து உண்ணும் பொழுது, மிகவும் சுவையாக இருக்கும். இதன் சாற்றை முகத்தில் பூசி 20 நிமிடம் ஊற வைத்து குளிர்ந்த நீரில் கழுவினால், முகப்பருக்கள் படிப்படியாக மறையும். இதனை தொடர்ந்து செய்து வந்தால், முகத்தில் அதிகளவில் உள்ள எண்ணெய்ப் பிசுபிசுப்பும் குறையும். தக்காளிச் சாறுடன் எலுமிச்சைச் சாறை கலந்து அதனைப் பசையாக்கி, முகத்தில் தடவி சுமார் ஒரு 20 நிமிடம் காய வைத்தால், பருக்களால் ஏற்பட்ட வடுக்கள் உடனடியாக மறையும்.
தக்காளியில் 1:2 என்ற விகிதத்தில் தயிரைக் கலந்து, அதில் உருவாகும் பசையை முகத்தில் தடவி 30 நிமிடம் ஊற வைத்துக் கழுவினால், முகத்தில் வெயிலால் ஏற்படும் கருமைப் புள்ளிகள் மற்றும் கருமைப் படலம் விரைவாக மறையும்.
தக்காளியுடன் சிறிதளவுப் பாலைக் கலந்து முகத்தில் தேய்த்துக் கழுவினால், முகம் பொலிவடையும். அதில் தேனைக் கலந்து பயன்படுத்தினால், சருமத்தின் நிறம் மாறுவதை நம்மால் எளிதாக உணர இயலும்.