உலகம் முழுவதும், மிரட்டி வரும் கொரோனா வைரஸானது, தற்பொழுது விஸ்வரூபம் எடுத்துள்ளது. இதுவரை, இதற்கு மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த வைரஸ் தொற்றால், இங்கிலாந்து சுகாதாரத்துறை அமைச்சரே பாதிக்கப்பட்டுள்ளார் என்ற அதிர்ச்சி கலந்த செய்தி வெளியான நிலையில், ஹாலிவுட்டின் நம்பர் ஒன் நடிகரான டாம் ஹேங்க்ஸ் என்பவருக்கும், அவருடைய மனைவிக்கும் இந்த வைரஸ் தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.
தன்னுடைய மனைவி ரீட்டா வில்சனுக்கும், தனக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பதாக, தன்னுடைய அதிகாரப்பூர்வ டிவிட்டர் கணக்கில் அவர் பதிவிட்டுள்ளார். அவரும், அவருடைய மனைவியும் கொரோனா வைரஸ் தொற்று இருக்கின்றதா, என சோதனைக்கு உட்படுத்தப்பட்டதாகவும், அதில் வைரஸ் தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு எனவும் கூறியுள்ளார்.
அடுத்து என்ன செய்வது? எப்படி தப்பிப்பது என்பதற்கான வழிமுறைகள் உள்ளன. அவைகளைப் பின்பற்றி உலகினைக் காப்போம் எனவும் அவர் தெரிவித்துள்ளார். உலகளவில் பிரசித்திப் பெற்ற வெற்றித் திரைப்படமான, டாவின்சி கோட் படத்தின் நாயகனான இவருக்கு, இந்த நோய் இருப்பதால் பலரும் தங்களுடையக் கவலையினைத் தெரிவித்து வருகின்றனர்.