உலகளவில் புதையல் மீதான மோகம் என்றும் குறைந்தது இல்லை. அரசர்கள் ஆட்சி செய்த காலம் தொடங்கி, தற்பொழுது வரை இந்த புதையல்கள் மீதான மோகம் என்றும் குறையாதது ஒன்றாக உள்ளது. அப்படி, உலகளவில் பல புதையல்கள் கண்டுபிடிக்கப்பட்டு இருந்தாலும், ஒரு சிலப் புதையல்களே மிகப் பெரிய அளவில் மதிப்புள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது.
இந்த புதையல், நம்முடைய பட்டியலில் பத்தாவது இடத்தினைப் பிடிக்கின்றது. இதனை ஜூன் மாதம் 2009ம் ஆண்டு கண்டுபிடித்தனர். டெர்ரி ஹெர்பட் என்ற, புதையல் ஆய்வாளர் வெற்றிகரமாக கண்டுபிடித்தார். அவர் இங்கிலாந்து நாட்டின், ஸ்டாஃபோர்ட்சியர் பகுதியில் ஆய்வு செய்த பொழுது, அவருடைய கருவியில் வித்தியாசமான சமிஞ்சை கிடைத்ததை அடுத்து, அங்கு ஆய்வு செய்தார்.
அந்த ஆய்வில், சுமார் 3,600 பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டது. அவர்கள் கண்டுபிடித்ததில் பெரும்பாலான பொருட்கள், இராணுவ தளவாடங்கள் மற்றும் போர் கருவிகள் இருந்துள்ளன. மேலும், 5 கிலோ எடையுள்ள தங்கம் மற்றும், ஒன்றரை கிலோ வெள்ளிப் பொருட்கள் ஆகியவை இடம் பெற்றுள்ளன. ஒரு சில கற்கள் முதலானவைகளும் கண்டுபிடிக்கப்பட்டன. இந்த கற்கள், பெரும்பாலும் இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் பகுதிகளில் இருந்து, வந்திருக்கும் வாய்ப்புகள் இருந்திருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
1980ம் ஆண்டுகளில், ரெக் மீட் மற்றும் ரிச்சர்ட் மைல்ஸ் என்பவர்களின் நிலத்தில் இருந்து தான் இந்தப் புதையல் கண்டுபிடிக்கப்பட்டது. இவர்கள் நிலத்தில் இருந்து, விவசாயத்தின் பொழுது, ஒரு சில நாணயங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. அதனைத் தொடர்ந்து, பல ஆய்வாளர்களை அழைத்து ஆய்வு செய்தனர். ஆனால் பத்து முதல் 15 மணி நேரங்கள் மட்டுமே, ஆய்வு செய்தனர்.
பின்னர், இந்த நிலத்தில் எதுவும் இல்லை என்றுக் கூறிவிட்டு சென்றுவிட்டனர். ஆனால், தந்தையும் மகளும் நம்பிக்கை இழக்கவில்லை. சரியாக 2012ம் ஆண்டு, இவர்களுடைய நிலத்தில் வேலை செய்யும் பொழுது, ஒரு சில நாணயங்களை கண்டெடுத்துள்ளனர். இதனைத் தொடர்ந்து, ஆய்வாளர்கள் அழைக்கப்பட்டனர். பெரிய அளவில் நடத்தப்பட்ட ஆய்வில், மொத்தமாக, 68,000 நாணயங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.
இங்கு கண்டுபிடிக்கபட்ட நாணயங்கள் பெரும்பாலும், 30 பிசி முதல் 40 பிசி காலக்கட்டத்திற்குள் இடைப்பட்டதாக இருக்கலாம் என கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.
இந்த புதையலும், 2012ம் ஆண்டு தான் கண்டுபிடிக்கப்பட்டது. வெஸ்ட்லி கேரிங்டன் என்பவர், இதனைக் கண்டுபிடித்தார். இவரும் மெட்டல் டிடெடக்டர் உதவியுடன் இதனைக் கண்டுபிடித்துள்ளார். தன்னுடைய பண்னை நிலத்தில், மெட்டல் டிடெக்டரை வைத்து ஆய்வு செய்து பார்க்கையில், சமிஞ்சை கிடைத்துள்ளது.
அதனைத் தொடர்ந்து, அவருடைய நிலத்தில், அகழ்வாய்வாளர்கள் உதவியுடன் ஆய்வு நடத்தப்பட்டது. அதில், இதுவரை கண்டுபிடிக்காத அளவில் தங்க நாணயங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. மேலும், 159 ரோமன் காலத்து நாணயங்களும் கிடைத்தன. இவைகள், நான்காம் ஏடி காலத்தவை எனக் கணித்துள்ளனர்.
1992ம் ஆண்டு, பீட்டர் வாட்லிங் என்ற விவசாயி தன்னுடைய கோடாரியை விவசாய நிலத்தில் தொலைத்துவிட்டார். அதனைக் கண்டுபிடிக்க, தன்னுடைய நண்பரின் மெட்டல் டிடெக்டரை உதவிக்காக பயன்படுத்தி உள்ளார். அதனைப் பயன்படுத்தும் பொழுது, ஸ்பூன்கள், தங்கம் மற்றும் வெள்ளி நாணயங்களைக் கண்டுபிடித்துள்ளார்.
இவைகளைப் பார்த்ததும், தொல்லியல் துறைக்குத் தகவல் கொடுத்துள்ளார். அவர்கள் வந்து ஆய்வு செய்தனர். அவர்கள் ஆய்வில், அதிகளவில் தங்கம் மற்றும் வெள்ளி நாணயங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. அவைகள், நான்காம் மற்றும் ஐந்தாம் நூற்றாண்டினைச் சார்ந்தவைகள் ஆகும்.
1840ம் ஆண்டு மே மாதம் இந்தப் புதையல் கண்டுபிடிக்கப்பட்டது. ஒரு குழுவினர், நதியினை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டனர். அப்பொழுது, அந்த நதியின் கரையில் இருந்து, வைக்கிங் இன மக்கள் பயன்படுத்திய பொருட்கள் கிடைத்துள்ளது. அவைகள் 903 ஏடி முதல் 910 ஏடி காலத்தினைச் சார்ந்தவையாக இருக்கலாம் என நம்பப்படுகின்றது.
தங்க நாணயங்கள், வெள்ளி நாணயங்கள், வைக்கிங் இன மக்கள் பயன்படுத்தியப் பொருட்கள், ஆயுதங்கள் எனப் பல பொருட்கள் இந்த இடத்தில் கிடைத்தன.
போலாந்து நாட்டின் ஸ்ரோடா ஸ்லாஷ்கா என்ற இடத்தில், பழையக் கட்டிடத்தினை ஒரு குழுவினர் இடித்துக் கொண்டு இருந்தனர். அப்பொழுது, அந்த கட்டிடத்தின் அடிப்பாகத்தினை இடிக்கும் பொழுது, ஒரு சில வெள்ளி நாணயங்கள் கிடைத்துள்ளன. அதனைத் தொடர்ந்து, அந்நகரத்து அதிகாரிகள் வந்து சோதனை செய்தனர்.
அவர்களுடைய மேற்பார்வையில், அந்த கட்டிடம் இடிக்கப்பட்டது. அப்பொழுது, பல தங்க நாணயங்களும், வெள்ளி நாணயங்களும் கிடைத்தன. இதனைத் தொடர்ந்து, அருகில் இருந்த பழைய கட்டிடத்தினையும் இடிக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது. அதன் அடிப்பகுதியில், அரசர் நான்காம் சார்லஸ் மனைவியின் நகைகள், கிரீடம் உள்ளிட்டவைகளும் கண்டுபிடிக்கப்பட்டன.
காசாரியா நாட்டின் கடற்பகுதியில், ஒரு நாள் பெரிய அலை ஒன்று வந்துள்ளது. அதன் பின்னர், அந்த கடற்பகுதியில், ஆழ்கடல் நீச்சல் வீரர் ஒருவர், நீச்சல் அடிக்க சென்றுள்ளார். அப்பொழுது, அவருடைய கண்களுக்கு வித்தியாசமான பொருள் ஒன்று தெரிந்துள்ளது. அதனைத் தொடர்ந்து, அங்கு சோதனைகள் நடத்தப்பட்டன. அப்பகுதியில் மொத்தமாக, 2000 தங்க நாணயங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. அவைகளில், அரேபிய எழுத்துகள் இடம் பெற்று இருந்தன.
இந்தப் பகுதியில் கிடைத்த தங்க நாணயங்கள் அனைத்தும், கிளியோபட்ரா காலத்தவை என கணிக்கப்பட்டு உள்ளது. இந்த நாணயங்கள் 95% சுத்தமான தங்கத்தால் ஆனவை. அனைத்து நாணயங்களுமே, 24 காரட் என்பது வியப்பளிக்கும் விஷயமாகவே இன்று வரை பார்க்கப்படுகின்றது. அது மட்டுமின்றி, 24 காரட் தங்கத்தால் ஆன, பல பொம்மைகளும், சிற்பங்களும் கண்டுபிடிக்கப்பட்டன.
2013ம் ஆண்டு, ஒரு நாள் ஒரு தம்பதியர் தங்களுடைய நாயுடன், புல்வெளியில் நடைபயிற்சி சென்றுள்ளனர். அப்பொழுது, அவர்களுடைய கண்களுக்கு, ஒரு வித தகர கேன் ஒன்று தெரிந்துள்ளது. அதனை, புவியில் இருந்து எடுத்துப் பார்த்தால், அனைத்தும் தங்க நாணயங்களாக இருந்துள்ளன. குஷியான தம்பதி, அப்பகுதியில் இருந்த பல கேன்களை தேடித் தோண்டி எடுத்துள்ளன.
அவர்கள் நம்பிக்கை வீண் போகவில்லை. அனைத்து கேன்களிலும் தங்க நாணயங்கள் இருந்துள்ளன. பின்னர், அருகில் இருந்த கல்லறைப் பகுதியிலும் தேடியுள்ளனர். அங்கும் தங்க நாணயங்கள் கிடைத்துள்ளன. இவைகளின் மதிப்பு தற்பொழுது வரை கணிக்க முடியாத ஒன்றாக உள்ளது.
1978ம் ஆண்டு, சோவியத்-ஆப்கான் ஆய்வாளர்கள் ஆய்வில் ஈடுபட்டு இருந்தனர். அப்பொழுது, சவப்பெட்டிகளை கண்டனர். அவைகளில் ஒன்றில் ஆண் உடலும், மற்றொன்றில் ஐந்து பெண் உடல்களும் இருந்துள்ளன.
இதனால், அப்பகுதியில் தொடர்ந்து ஆய்வு மேற்கொண்டனர். அப்பொழுது, 20,600க்கும் அதிகமான பொருட்கள் கைப்பற்றப்பட்டன. அவைகளில், தங்க நாணயங்கள், வெள்ளி நாணயங்கள், விலைமதிப்பற்ற ரத்தினக் கற்கள், தங்க ஒட்டியானங்கள், கழுத்து ஆபரணங்கள், தங்கத்தால் ஆன கிரீடங்கள் மற்றும் கை அணிகலன்கள் கண்டெடுக்கப்பட்டன.
இந்தியாவின் பத்மநாப சுவாமி கோயிலில், உள்ள இரகசிய அறைகளில் இருந்து பல லட்சம் கோடி மதிப்புள்ள நகைகள் மற்றும் ஆபரணங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. அங்குள்ள ஆறு இரகசிய அறைகளில், ஐந்து அறைகளை திறந்தனர். அதில், பி எனக் குறிப்பிடப்பட்ட அறையில் இருந்து, பல ஆயிரம் கிலோ தங்கப் பொருட்கள், நாணயங்கள், மஹா விஷ்ணுவின் நகைகள், உருவங்கள் முதலானவைக் கண்டுபிடிக்கப்பட்டன. பல விலைமதிப்பற்ற கற்களும் கண்டுபிடிக்கப்பட்டன. இதன் மதிப்பு தற்பொழுது வரை, அளவிடப்பட்டு வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.